மகாராஜா எக்ஸ்பிரஸில் திருமணம் செய்ய வேண்டுமா? படியுங்கள் !

5.5 கோடி ரூபாய் செலவு செய்ய தயார் என்றால் இந்தியா வில் மிகவும் ஆடம்பர மான சொகுசு ரயிலான மகாராஜா எக்ஸ்பிர ஸில் திருமணம் நடத்திக் கொள்ள லாம். ஐ.ஆர்.சி.டி.சி. 
நிறுவனம் இதற்கான திட்டத்தை தயாரித்து வருகிறது. திருமண த்தை வித்தியாச மான முறையில் ஆடம்பர மாக நடத்து வதை சிலர் விரும்புகி றார்கள். 
விமானத் திலும், நீருக்கு அடியும், கப்பலிலும், மலை உச்சியி லும் ஆடம்பர மாக திருமணம் நடத்து வார்கள். 

இதே போல் சில உயர்தரப் பணக்காரர்கள் திருமண த்தை சுற்றுலா வுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று விரும்பு வார்கள்.

அவர்களின் விருப்ப த்தை பூர்த்தி செய்யும் வகையில் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருமணம் நடத்திக் கொள்ளும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது. 

தக்காளியை சமைக்காமல் சாப்பிட்டால் நம் உடலில் என்ன நடக்கும்? 

இது தொடர் பாக ஐ.ஆர்.சி. டி.சி.யின் மேற்கு மண்டல உயர் அதிகாரி ஒருவர் கூறுகை யில் ’ 

மணமகன், மண மகள் மற்றும் அவர்களுடைய குடும்பத் தினர் திருமணத்தை தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி யாக நினைவு கூறுவத ற்காக இந்த திட்டத்தை நாங்கள் அமல் படுத்த வுள்ளோம்’ என்றார். 
எட்டு நாட்கள் திருமணச் சுற்றுலா விற்கு மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் முழுவ தையும் முன் பதிவு செய்ய லாம். 
இதற்கு 5.5 கோடி ரூபாய் செலவாகும். மொத்தம் 88 பயணிகள் பயணிக்கலாம். இந்த ஆடம்பர சொகுசு ரயிலில் மொத்தம் 24 பெட்டிகள் உள்ளன.

இவற்றில் 43 விருந் தினர் அறைகள் உள்ளன. இதில் 20 டீலக்ஸ், 18 ஜூனியர் சூட்கள், 4 சூட்கள் மற்றும் ஒரு பிரசிடென்சி யில் சூட் உள்ளிட்ட வையும் அடங்கும்.

இந்த மகாராஜா ரயிலில், ஹெரிடேஜ் டூர் மற்றும் பனோரமா டூர் ஆகிய இரு பேக்கேஜ் களில் உள்ளன. 

ஹெரிடேஜ் டூர் என்பது மும்பை யில் இருந்து புறப்பட்டு அஜந்தா, உதய்பூர், ஜோத்பூர், பிகானீர், ஜெய்பூர், ரன்தம்பூர் மற்றும் 

ஆக்ரா வழியாக டெல்லி செல்லும். மொத்தம் 8 நாட்கள் பயணி க்கும். இந்த ரயிலில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.4.5 லட்சம் கட்டணம் ஆகும். 
பிரசிடென் சியல் சூட் எனில் 15.8 லட்சம் ரூபாய் ஆகும். பனோரமா டூர் என்பது டெல்லி யில் இருந்து புறப்பட்டு ஜெய்பூர், ஆக்ரா, குவாலியர், கஜுராஹோ, வாரனாசி மற்றும் லக்னோ வழியாக சென்று மீண்டும் டெல்லியை அடையும்.
திருமணம் தவிரி பாலிவுட் சினிமா சூட்டிங், பேஷன் நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் உள்ளட்ட வைகளை மகாராஜா ரயிலில் நடத்திக் கொள்ளும் வசதியை, 
அறிமுகம் செய்ய ஐ.ஆர். சி.டி.சி. முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ஐ.ஆர்.சி.டி .சி.யின் மேற்கு மண்டல செய்தி தொடர் பாளர் பினாகின் மோரவாலா தெரிவித் துள்ளார்.
Tags: