மூளைச்சாவு அடைந்த அழகியல் சிகிச்சை நிபுணர் !

மூளைச்சாவு அடைந்த சென்னை அரசு ஸ்டான்லி மருத்து வமனை அழகியல் துறைத்தலைவர் டாக்டர் ஜி.ஆர். ரத்னவேல் உடல் உறுப்புகள் தானம் செய்யப் பட்டது.
மூளைச்சாவு அடைந்த அழகியல் சிகிச்சை நிபுணர் !
தோல் மட்டும் அவர் தொடங்கிய தோல் வங்கிக்கு தானமாக கொடுக்கப் பட்டது.சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை அழகியல் துறைத் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜி.ஆர். ரத்னவேல் (48). 

திருச்சியில் நடந்த தோல் நோய் குறித்த மாநாட்டை முடித்து விட்டு, கடந்த 7-ம் தேதி திருச்சி உச்சி பிள்ளை யார் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து கொண் டிருந்தார். 

அப்போது மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவரை பொது மக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். 

டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில், மூளையில் ரத்தக் குழாய் வெடித்து ரத்தம் உறைந்து இருப்பது தெரிய வந்தது. சுயநினைவு இழந்த நிலையில் இருந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

இந்நிலை யில், கடந்த 9-ம் தேதி மூளைச் சாவு அடைந்தார். கடந்த 10-ம் தேதி குடும்பத் தினரின் விருப்பப்படி அவரது சிறு நீரகங்கள், கல்லீரல், கண்கள், தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப் பட்டன.
அதன்பின், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்ப டைக்கப் பட்டது. 

நேற்று முன் தினம் சென்னை காசிமேட்டில் ரத்னவேல் உடல் தகனம் செய்யப் பட்டது. இது தொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் (பொறுப்பு) பொன்னம் பலம் நமச்சி வாயம், ஆர்எம்ஓ ரமேஷ் ஆகியோர் கூறிய தாவது:

திறமை யான டாக்டர் ஜி.ஆர். ரத்னவேல். தோல் நோய் சிகிச்சை நிபுண ரான இவர், அரசு மருத்துவ மனைகளிலேயே முதல் முறையாக இந்த மருத்துவ மனையில் அழகியல் துறையை தொடங்கினார். 

இந்த ஆண்டு தோல் குறித்த சிறப்பு படிப்பையும் ஆரம்பித்தார். கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி இந்தியாவி லேயே அரசு மருத்துவ மனைகளில் முதல் முறையாக 

தீக்காயங்கள் போன்ற வற்றால் பாதிக்கப் பட்டவர் களுக்கு சிகிச்சை அளிப்பத ற்காக அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் தோல் வங்கியை தொடங்கினார். 

எப்போதும் அழகா கவும், இளமை யாகவும் இருப்பத ற்கான போடாக்ஸ் என்ற மருந்தை ஊசி மூலம் போடுவது, தலையில் முடி நடுவது போன்ற சிகிச்சை களில் நிபுணத் துவம் பெற்றவர். 
இது போன்ற சிகிச்சை களை அதிக அளவில் செய்து ள்ளார். தானம் செய்யப்பட்ட ரத்னவேல் உடல் உறுப்பு கள் மருத்துவ மனைகளில் சிகிச்சைப் பெறுபவர் களுக்கு பொருத்தப் பட்டது. 

தோல் மட்டும் ஸ்டான்லி மருத்துவ மனையில் அவர் தொடங்கிய தோல் வங்கிக்கு தானம் கொடுக்கப் பட்டது. 

ரத்னவேல் மறைவு அழகியல் துறைக்கு மட்டுமின்றி மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags: