வைட்டமின் ஏ உடலுக்கு ஏன் தேவை ?

உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கண்ணில் உள்ள ரெட்டினா பகுதியில் இருக்கும் செல்களுக்கு, 


ரெட்டினால் என்ற ஊட்டச் சத்து அவசியம். ரெட்டினால் நிறைந்த உணவுகளைச் சாப்பிடும் போது,

பார்வை தெளி வடைவதோடு, ரெட்டினாவைப் பாதிக்கும் கண் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும். ரெட்டினொயிக் அமிலம், உடலில் வளர்ச்சிக்கான ஹார்மோன் சீராக சுரக்க உதவுகிறது.

வளர் இளம் பருவத்தினருக்கு வைட்டமின் ஏ அவசியம் தேவை. குறைந்த வெளிச்சத்தில் பார்வைத் திறன் குறையும் பிரச்னையான மாலை கண் நோயில் இருந்து காப்பாற்றும் ஆற்றல், வைட்டமின் ‘ஏ’ க்கு மட்டுமே உண்டு. 


தோல் பொலிவு அடைவதற்கும், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உடலுக்குக் கிடைக்கவும் வைட்டமின் ஏ துணை புரிகிறது. மேலும், வளர்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்துகிறது. 

எவ்வளவு வைட்டமின் ஏ தேவை? 

ரெட்டினால் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய வைட்டமின் ஏ சத்துக்கள், நேரடியாக உணவில் இருந்து கிடைக்கின்றன.

ஆண்கள், பெண்கள் இருவருக்குமே ஒரு நாளைக்கு சுமார் 2400 மை.கி அளவுக்கு பீட்டா கரோட்டின் தேவை அல்லது 600 மை.கி அளவுக்கு ரெட்டினால் தேவை. பாலூட்டும் தாய் மார்களுக்கு தினமும் 3800 மை.கி பீட்டா கரோட்டின் தேவை. 


காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றில் பீட்டாகரோட்டின் அதிகமாக இருக்கும். பால், மீன், முட்டை, வெண்ணெய், சீஸ், ஆடு, மாடு, கோழியின் கல்லீரலில் ரெட்டினால் அதிகம் இருக்கிறது.

ஏதேனும் நோய் வாய்ப் பட்டவர்கள், வைட்டமின் ஏ சத்து குறைவால் அவதிப் படுபவர்கள் மருத்துவர் பரிந்துரை பெயரில் வைட்டமின் ஏ மாத்திரை களைச் சாப்பிடலாம். ஆரோக்கியமாக இருப்பவர்கள் உணவின் மூலம் வைட்டமின்- ஏ வைப் பெறுவதே சிறந்தது. 

வைட்டமின் ஏ அதிகமானால்? 

மற்ற வைட்டமின்களைப் போல அல்லாமல் வைட்டமின் ஏ கொழுப்பில் கரைந்து, கல்லீரலில் சேகரிக்கப் படுகிறது. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை ஒருவர் அன்றாடம் சாப்பிட வேண்டிய அளவைத் தாண்டி, 



அதிகமாக தினமும் உண்டால், உடலில் வைட்டமின் ஏ அதிகமாகி, காய்ச்சல், தலைவலி, பசியின்மை, தூக்கமின்மை, தோல் எரிச்சல், ரத்த சோகை, வாந்தி முதலான பக்க விளைவுகள் ஏற்படும். எனவே, அளவுடன் சாப்பிட வேண்டும். 

எது வைட்டமின் ஏ? 

ரெட்டினால் (Retinol), ரெட்டினல் (Retinal), ரெட்டினொயிக் அமிலம் (Retinoic Acid), பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்களின் வெவ்வேறு வடிவங்கள் தான் வைட்டமின் ஏ.
Tags:
Privacy and cookie settings