மசாஜ் புகார்... சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மனு டிஸ்மிஸ் !

நிர்வாண மசாஜ் உள்ளிட்ட புகார் தொடர்பான வழக்கில் அதிமுக வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் மற்றும் தாயார் ஆகியோர் தாக்கல் செய்திருந்த 
மசாஜ் புகார்... சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மனு டிஸ்மிஸ் !

முன் ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதி மன்ற கிளை தள்ளுபடி செய்து விட்டது. 


முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்ய சபாவில் புகார் கூறியவர் சசிகலா புஷ்பா. இதனால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப் பட்டார்.

அப்போது சசிகலா புஷ்பாவின் வீட்டில் பணிபுரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் போலீசில் பாலியல் தொல்லை புகார் ஒன்றை அளித்தனர்.

இதனடிப் படையில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்க கேஸ்வரன், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 

இதை யடுத்து டெல்லி உயர் நீதிமன்ற த்தில் சசிகலா புஷ்பா குடும்பத் தினர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். 

இதனை விசாரித்த டெல்லி உயர் நீதி மன்றம், 6 வார காலத்து க்கு சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக் கால தடை விதித்தது.

அத்துடன் கடந்த 29-ந் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆஜராகவும் உத்தர விட்டது. அன்றைய தினம் சசிகலா புஷ்பா முன் ஜாமீன் மனு மீது விசாரணை நடை பெற்றது. 


பின்னர் தேதி குறிப்பிடப் படாமல் இவ்வழக் கில் தீர்ப்பு ஒத்திவைக் கப்பட்டது. 

இந்த நிலையில் இன்று சசிகலா புஷ்பா, கணவர், மகன் மற்றும் தாயார் ஆகியோரது ஜாமீன் மனு மொத்த மாக சென்னை உயர் நீதிமன்றத் தின் மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப் பட்டது.
Tags:
Privacy and cookie settings