ஒலிம்பிக் சாதனை வீரர்களுக்கு கேல் ரத்னா விருது !

ரியோ ஒலிம்பிக் சாதனை வீரர்களான சிந்து, சாக்‌ஷி, திபா கர்மாகர், ஜிது ராய் ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
ஒலிம்பிக் சாதனை வீரர்களுக்கு கேல் ரத்னா விருது !
நாட்டின் உயரிய விருதான கேல்ரத்னா விருது முதன் முறையாக 4 தடகள வீரர்களுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப் படுகிறது. 

திபா கர்மாகரின் பயிற்சியாளர் விஷ்வேஷ்வர் நந்தி துரோணாச்சாரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இவருடன் நாகபுரி ரமேஷ் (தடகளம்), சாகர் மல் தயாள் (குத்துச்சண்டை), ராஜ்குமார் ஷர்மா (கிரிக்கெட்), எஸ்.பிரதீப் குமார் (நீச்சல்), 

மஹாவீர் சிங் (மல்யுத்தம்) ஆகியோருக்கும் துரோணாச்சாரியர் விருது வழங்கப்படுகிறது.

மேலும் 15 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதும், 3 வீரர்களுக்கு தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டியாலா பஞ்சாபி பல்கலைக்கழகத்திற்கு மவுலானா அபுல்கலாம் ஆசாத் டிராபி (2015-16) வழங்கப்படுகிறது.

விருது பெறுபவர்கள், பதக்கம் மற்றும் ரூ.7.5 லட்சம் தொகை பரிசாக பெறுவார்கள். அர்ஜுனா, துரோணாச்சாரியா, தயான் சந்த் விருது பெற்றவர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்படும்.

இந்த விருதுகளுக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் குழுவுக்கு நீதிபதி எஸ்.கே.அகர்வால் தலைமை வகித்தார். ஆகஸ்ட் 29-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்குகிறார்.
விருது பெறுபவர்கள் விவரம்:

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறும் வீர்ர்கள்:

பி.வி. சிந்து (பாட்மிண்டன்), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ஜித்து ராய் (துப்பாக்கிச் சுடுதல்), சாக்‌ஷி மாலிக் (மல்யுத்தம்) ஆகியோருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

துரோணாச்சாரியார் விருது பெறுபவர்கள்

நாகபுரி ரமேஷ் (தடகளம்), சாகர்மால் தயாள் (குத்துச்சண்டை), ராஜ்குமார் சர்மா (கிரிக்கெட்), பிஸ்வேஷ்வர் நந்தி (ஜிம்னாஸ்டிக்ஸ்), 

பிரதீப் குமார் (நீச்சல்), மகாபிர் சிங் (மல்யுத்தம்) ஆகியோருக்குத் துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

அர்ஜுனா விருது பெறும் வீரர்கள்:
ரஜத் செளகான் (வில்வித்தை), லலிதா பாபர் (தடகளம்), செளரவ் கோத்தாரி (பில்லியர்ட்ஸ் & ஸ்னூக்கர்), 

ஷிவ தாபா (குத்துச்சண்டை), ரஹானே (கிரிக்கெட்), சுப்ரதா பால் (கால்பந்து), ராணி (ஹாக்கி), வி.ஆர். ரகுநாத் (ஹாக்கி),

குர்ப்ரீத் சிங் (துப்பாக்கிச் சுடுதல்), அபூர்வி சண்டேலா (துப்பாக்கிச் சுடுதல்), செளம்யாஜித் கோஷ் (டேபிள் டென்னிஸ்), வினேஷ் போகட் (மல்யுத்தம்), 

அமித் குமார் (மல்யுத்தம்), சந்தீப் சிங் மன் (பாரா-தடகளம்), விரேந்தர் சிங் (மல்யுத்தம்) ஆகியோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

தயான்சந்த் விருது:

சாத்தி கீதா (தடகளம்), சில்வேனஸ் துங் துங் (ஹாக்கி), ராஜேந்திர பிரஹலாத் ஷெல்கே (படகு).
Tags:
Privacy and cookie settings