கழுத்து வலிக்கு மத்யாசனம் பயிற்சி !





கழுத்து வலிக்கு மத்யாசனம் பயிற்சி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
கழுத்துவலி என்பது இப்போது தவிர்க்க முடியாததொன்று. நெடு நேரம் கணிப்பொறிக்கு முன்னாடியே அமர்ந்து இருப்பதால் பெரும்பாலோனோர் கழுத்து மற்றும் தோள்பட்டை வலிக்கு ஆளாவர்கள். 
கழுத்து வலிக்கு மத்யாசனம் பயிற்சி !
அதை அப்படியே விட்டால் ஸ்பாண்டிலிட்டிஸ் போன்ற கழுத்து தேய்மானத்திற்கு வழிவகுக்கும். தாங்க முடியாத வலி இருக்கும். 

அன்றாட வேலைகளில் கவனமில்லாமல் போய்விடும். இதனை ஆரம்ப நிலையிலேயே சரி செய்து விடலாம்.

மாத்திரை மருந்துகளில் சரி செய்ய நினைப்பதை விட, இயற்கை வழியில் இதனை குணப்படுத்த முயலுங்கள். இதற்கும் தீர்வு இருக்கிறது யோகாவில்.

மத்யாசனம் :

மத்ஸ என்றால் மீன் என்று சமஸ்கிருதத்தில் பொருள் தரும். மீன் போன்ற நிலையில் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். நீரில் இந்த நிலையில் இருந்தால் நீரில் மூழ்காமல் மிதப்பதற்கு உதவும் இந்த ஆசனம் .
மிருகங்களுடன் பாலியல் - இது ஒரு விதமான மனநோயா?
அதற்காகவே இந்த பெயர் பெற்றுள்ளது. இந்த நிலையில் யோகா செய்வதால், மன அழுத்தம், கழுத்துவலி, நரம்பு பிரச்சனை ஆகியவை தீரும். 

அதேபோல் வயிற்று பகுதியில் அழுத்தம் தரப்படுவதால் கொழுப்புகள் குறைந்து தொப்பை குறைய வழிவகுக்கும். 

நாள் தவறாமல் இந்த யோகாவை செய்து வந்தால், எளிதில் பலன் கிடைக்கும். இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை :

முதலில் தரையில் மல்லாக்க படுத்துக் கொள்ளுங்கள். கால் மற்றும் கைகளை நேராக வைத்துக் கொள்ளுங்கள். மெதுவாய் மூச்சு விடவும். இப்போது மெதுவாய் இரண்டு முழங்கைகளை ஊன்றி உடலை மட்டும் தூக்குங்கள்.
இடுப்புப் பகுதி தரையிலேயே இருக்க வேண்டும். பிறகு மார்பினை மேலே உயர்த்தி தலையை இப்போது தரையில் முட்டுங்கள். மெதுவாய் மூச்சை இழுத்து விடுங்கள்.

கழுத்திற்கு அதிகம் சிரமம் தராதவாறு பார்த்துக் கொள்ளவும். இப்போது மெதுவாய் மார்பை தரையில் பதித்து இயல்பு நிலையில் படுத்துக் கொள்ளுங்கள்.

பலன்கள் :

கழுத்து, தோள்பட்டை வலியை குணப்படுத்தும். சுவாசத்தை சீர்படுத்தும். மார்புக் கூடு விரிவடையும். தைராய்டு சுரப்பிகள் நன்றாக இயங்கும்.
குறிப்பு :

அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மற்றும் குறைவான ரத்த அழுத்த, உள்ளவரகள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

முதுகு மற்றும் இடுப்பு அறுவை சிகிச்சை செய்தவர்கள், கீழ் முதுகு வலி உள்ளவர்களும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
Tags: