ஒரு தந்தை ஹீரோவான தருணம் !

கடந்த வாரம் மொத்த இன்டெ ர்நெட்டிலும் வைரலானது ஒரு போட்டோ. இயற்கையோ, செயற்கையோ, அழகோ எதுவுமே இல்லாத அந்த போட்டோ வைரலாகக் காரணம் ஒரு தந்தையின் பாசம். 
ஒரு தந்தை ஹீரோவான தருணம் !
தன் மகனின் முகத்தை நோக்கிப் பறந்து வந்த பேஸ்பால் பேட்டை, தனது கையால் தடுத்ததை ஒரு போட்டோ கிராஃபர் கிளிக்கிட, ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆகி விட்டார் அந்த பாசக்கார டேடி!
அமெரிக்காவின் ஓர்லாண்டோவில் நடைபெற்ற ஒரு பேஸ்பால் போட்டியைக் காண, தனது மகன் லாண்டனை முதல் முறையாக ஸ்டேடி யத்திற்குக் கூட்டிச் சென்றுள்ளார் ஷான் கன்னிங்ஹம்.

முதல் முறையாக மைதா னத்திலிருந்த மகிழ்ச்சியில் தன்னைப் புகைப்படம் எடுத்து தனது தாய்க்கு மெசேஜ் செய்து கொண்டிருந்தான் சிறுவன் லாண்டோ.

ஆட்டத்தைப் பார்க்காமல் லாண்டன் கீழே குனிந்து மெசேஜ் செய்து கொண்டிருக்க, பிட்ஸ்பர்க் பைரட்ஸ் அணியின் வீரர் டேனி ஒரிட்ஸ் கையிலி ருந்து நழுவிய பேஸ்பால் பேட், லாண்டனை நோக்கிப் பாய்ந்தது. 

மகன் அதை கவனிக்க வில்லை யென்றாலும் உஷாராக இருந்த ஷான் தனது மகனின் முகம் நோக்கி வந்த பேட்டை, தனது கைகளை நீட்டித் தடுத்து விட்டார். 
ஒரு நொடிப் பொழுதில் யாரும் எதிர் பார்க்காமல் நடந்த இச்சம்பவத்தை மிகச் சிறப்பாக படம் பிடித்து விட்டார் கிறிஸ்டோபர் ஹார்னர். 
இந்தப் புகைப்படம் வெளியான நிமிடத்தி லிருந்து ஹார்னரு க்கும் ஷானுக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

இச்சம்பவத் தின் போது என் மகன் ஆட்டத்தைக் கவனிக்க வில்லை. ஆனாலும் நான் அவனை கவனிக் காமல் இருக்க வில்லை. மிகவும் வித்தியா சமாக இருக்கிறது. 

கடந்த 24 மணி நேரமாக என்னென்னமோ நடக்கிறது. பாராட்டித் தள்ளுகிறார்கள்” என்று பூரிக்கிறார் ஷான். ஆனால் இச்சம்பவம் குறித்து அறிந்த அவரது மனைவிக்குத் தான் அடிவயிறே கலங்கி விட்டதாம்.

இப்புகைப் படத்தை எடுத்த ஹார்னரோ மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறார். 

இத்தாலியின் மிகப்பெரிய ஓவியரான டிடியனின் ஓவியத்தோடு இவரது புகைப் படத்தை ஒப்பிட்டால்? இதைவிட ஒரு கலைஞனுக்கு என்ன சன்மானம் கிடைத்திட வேண்டும்.

தனது மகன் ஐசக்கை ஆபிரஹாம் கொல்லப் போகும் அந்நொடியில், ஒரு தேவதை அவனைத் தடுக்கும் ‘ஆபிரஹாம் அன்ட் ஐசக்’ ஓவியத்தோடு ஒப்பிட்டு ஹார்னரைப் பாராட்டி யுள்ளது பி.பி.சி.
ஒரு சாதாரண மனிதன் ஹீரோவான தருணத்தை படம் பிடித்தது மகிழ்ச்சிய ளிக்கிறது. 

பேட் அங்கு வந்ததற்கும் அவரது கை நீண்டதற்கும் மிகச்சிறிய இடைவெளியே இருந்தது. ஒருவேளை அவர் அப்படி செய்திருக்கா விட்டால், 
யாரும் பார்க்க விரும்பியிருக்காத தருணத்தையே நான் படம் பிடித்தி ருப்பேன் என்று அந்தப் பதட்டமான சம்பவத்தைப் பற்றிக் கூறினார் ஹார்பர். 

சொல்லப் போனால் இது வெறும் புகைப்படம் மட்டுமல்ல, தந்தைப் பாசத்திற் கான சான்று. 

இந்தத் தந்தை மட்டுமல்ல, கோபத்தில் திட்டித் தீர்க்கும் எந்தத் தந்தையும் இப்படித் தான். ஆனால் அவர்களின் பாசத்திற்கான சான்றுகள் தான் ஏது மில்லை. 
தங்கள் பிள்ளைக்கு கஷ்டம் வருகையில் சற்றும் தாமதிக் காமல் உதவும் ஒவ்வொறு தந்தைக ளுக்கும் இப்புகைப் படைத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
Tags: