ஒரு நாளில் 20-25 சிசேரியன்... டாக்டரா? இல்லை? அரசு மருத்துமனை !

அரசு மருத்துவ மனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் இருக்கும் மருத்துவர் களைக் கொண்டே சிகிச்சை மேற் கொள்ள வேண்டியி ருக்கிறது. 
இந்தப் பணிச்சுமையால் மருத்துவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியிலான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்கிறது மருத்துவர் தரப்பு.

அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றக் கூடிய மருத்து வர்களின் நெருக்கடி நிலையைப் பற்றிப் பேசுகிறார் மருத்துவரும் செயற் பாட்டாள ருமான ரமேஷ்...

‘‘தமிழகத்தில் மொத்தம் 20 அரசு மருத்துவக் கல்லூரி களும், 15 தனியார் மருத்துவக் கல்லூரி களும் இருக்கின்றன. இக்கல்லூரி களிலிருந்து ஆண்டுக்கு 5 ஆயிரம் இளநிலை மருத்து வர்கள் வெளி வருகின்றனர். 

அரசு மருத்துவ மனைகளில் ஆண்டுக்கு ஆயிரம் இளநிலை மருத்துவர் களுக்கான தேவை இருக்கிறது. ஆக, தேவைக்கு அதிகமான அளவில் இளநிலை மருத்து வர்கள் இருக்கி றார்கள். 

ஆனால், இதய நோய், மகப்பேறு, சிறுநீரகவியல் போன்ற மருத்துவத் துறைகளு க்கான சிறப்பு மருத்துவர் களுக்கு தான் இங்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

2015ம் ஆண்டு அரசு மருத்துவ மனைகளுக்கு 500 மகப்பேறு மருத்துவர் களுக்கான தேவை இருந்தது. ஆனால், மகப்பேறு மருத்துவம் படித்து வெளியே வந்த வர்கள் 50க்கும் குறைவான வர்களே. 

இப்படி ஒவ்வொரு துறையிலும் தேவைக்கும் குறை வானவர்கள் தான் படித்து முடித்திருக் கிறார்கள். இதனால் கடும் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலை மிகவும் அபாய கரமானது. 

ஏனெனில், ஆண்டுக்கு 500 பேர் தேவைப் படக்கூடிய சிகிச்சை களை ஆட்கள் பற்றாக் குறை காரணமாக 50க்கும் குறைவான வர்களைக் கொண்டு மேற்கொள்ள வேண்டியி ருக்கிறது.

இதனால் ஒவ்வொரு மருத்து வரும் அதிக நேரம் பணியாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப் படுகின்றனர். எனது மனைவி மகப்பேறு மருத்து வராக திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார். 
காலை 7 மணிக்கு பணிக்குச் சென்றால் அடுத்த நாள் மதியம் 2 மணி வரைக்கும் அவரது பணி நீடிக்கும். அதாவது, 31 மணி நேரம் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய இக்கட்டான சூழல்.

இந்த 31 மணி நேரத்தில் சராசரியாக 20-25 சிசேரியன் வரை செய்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. ஒரு மருத்துவர் மூன்று சிசேரியனுக்கு மேல் செய்தாலே அதன் தரம் குறையும் என்பது தான் உண்மை. 

இப்படி இருக்கையில் உறக்கமே இல்லாமல் 20க்கும் மேற்பட்ட சிசேரியன்கள் மேற்கொள்ளும் போது எப்படி முழு கவனத்துடன் செயல்பட முடியும்? இந்தியாவில் பொது மக்களின் சராசரி வாழ்நாள் 70 வயது. 

மருத்து வர்களின் வாழ்நாளோ 56 வயதுதான். பணிச்சுமை காரணமாக சரியான நேரத்துக்கு உணவு, உறக்கம் இல்லாததால் மருத்து வர்களின் ஆயுள் குறைவாக இருக்கிறது.

பணிச்சுமை அதிகம் என்கிற சூழலிலும், மருத்துவர் களுக்கான ஊதியம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. தனியார் மருத்துவ மனை களோடு ஒப்பி டுகையில் 

அரசு மருத்துவ மனையில் அதிக நேரம் அதிக சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டி யிருக்கிறது. இருந்தும் தனியாரை விட குறைவான ஊதியமே வழங்கப் படுகிறது. 

இதைக் கணக்கில் கொண்டே பல மருத்து வர்கள் வேலையை விட்டு விலகி விடுகி ன்றனர். அது பணியிலிருப் பவர்களு க்கு மேலும் சுமையைக் கொடுக்கிறது.

இந்த நிலைக்குக் காரணம் மருத்துவக் கல்லூரி களில் சிறப்பு மருத்துவத் துறைப் படிப்பு க்கான இடங்கள் குறைவான அளவிலேயே ஒதுக்கப் பட்டிருக் கின்றன.

அனைத்துத் துறை களுக்கும் சேர்த்து தமிழ் நாட்டில் சிறப்பு மருத்துவப் படிப்புக்கு 1,200 இடங்களும், உயர் சிறப்பு மருத்து வத்துக்கு 250 இடங்களும் தான் ஒதுக்கப் பட்டிருக் கின்றன. 

இதனால் தான் ஆண்டுக்கு 10 இதய நோய் மருத்து வர்கள், 8 சிறுநீரக மருத்து வர்கள், 6 ரத்த நாள சிகிச்சை மருத்துவர்கள் என சொற்ப மருத்து வர்களே வெளி வருகின்றனர். 

7 கோடி பேர் வாழும் தமிழ்நாட்டில் இவ்வளவு குறைவான எண்ணி க்கையில் சிறப்பு மருத்து வர்களைக் கொண்டு என்ன செய்ய முடியும்?

இளநிலை மருத்துவர் களுக்கு 6 மாதப் பயிற்சி வழங்கி துறை சார்ந்த சிகிச்சை களை மேற்கொள்ளச் சொல்கிறார்கள். ஒரு துறை சார்ந்து படித்து வரும் மருத்துவர் இடத்தில், 
6 மாதம் பயிற்சி பெற்ற இளநிலை மருத்துவரைக் கொண்டு நிரப்புவது எந்த முறையில் சரியானதாக இருக்கும்? இளநிலை மருத்து வர்களால் அவசரக் கட்டத்தை கையாள முடியாது.

இதனால் நிறைய தவறுகள் நடக்க வாய்ப்பி ருக்கிறது. சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகரிக் கப்பட வேண்டும். மேலும், முதுநிலைப் படிப்பை ஊக்குவி ப்பதற்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும். 

தனியார் அளவுக்கு இல்லா விட்டாலும் மத்திய அரசு வழங்கும் அளவுக் காவது மருத்துவர் களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும்’’ என்கிறார் டாக்டர் ரமேஷ்.... நன்றி குங்குமம் டாக்டர்.
Tags: