கத்தியின்றி, ரத்தம் இன்றி... லேசர் சிகிச்சை !

பல் சொத்தையா? பல் வலியா? ஈறுகளில் வீக்கமா? இத்தனை இருந்தாலும் பல் டாக்டரிடம் போகவே பலர் அலறுவார்கள். மீறி போனாலோ, டாக்டர் கொரடா,



ட்ரில்லிங் மெஷின் என்று நம் முகத்துக்கு முன் கொண்டுவரும் போதே வயிற்றில் கிலி ஏற்படும். பல் சொத்தை என்று போனால் ஒரு சிறிய கிரைண்டிங் வீலை வைத்துச் சுரண்டி எடுப்பார்கள்.

அப்போது ஏற்படும் பயங்கரமான வலி, கூச்சம் தாங்க முடியாததாக இருக்கும். பல்லை பிடுங்கிவிட்டாலோ முகமே வீங்கிப் போய் சாப்பிடவே தடுமாறுவோம்.

இனி நீங்கள் பல் சிகிச்சைகளுக்கு சிரித்த முகத்தோடு சென்று அதே சிரிப்போடு திரும்பி வரலாம்.

லேசர் பல் சிகிச்சை முறைகளில் வலியோ, ரத்தமோ இருக்காது’’ என்கிறார் பல் மருத்துவர் ப்ரியா பிரபாகரன். லேசர் பல் மருத்துவத்தின் சிறப்புகளைப் பற்றித் தொடர்கிறார் அவர்.

லேசர் கதிர்கள் நன்கு ஊடுருவிச் சென்று பல் சொத்தைக்குக் காரணமான கிருமிகளை அழித்துவிடுகிறது.

ஈறு பிரச்னைகளை சரிசெய்யும்போது வலி தெரியாமல் இருக்க மரத்துப்போகும் ஊசிபோட்டு பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்படும். இதனால் ரத்தக்கசிவு ஏற்படும்.

அறுவை சிகிச்சை முடிந்தவுடன் தையல் போடப்படும். லேசர் சிகிச்சையிலோ மயக்க ஊசி தேவையில்லை. கத்தியின்றி ரத்தமின்றி, தையலின்றி மிக சுலபமாக செய்து முடிக்கப்படும்.

லேசர் கருவியின் முனையை எந்த இடத்தில் திசுவை அகற்ற வேண்டுமோ அங்கு கொண்டு சென்றாலே தானாகவே அந்தப் பகுதியை வெட்ட ஆரம்பித்து விடும். அப்படி வெட்டப்படும்

இடத்தில் ஏற்படும் புண்ணை இந்த லேசர் கதிர்கள் விரைவில் ஆற்றிவிடும். ரத்தக்கசிவு குறைவதால் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பும் குறைவதோடு, சிகிச்சைக்குப் பின் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் அளவும் குறைகிறது.

பழைய முறையில் ஒரு பல்லை சரிசெய்யும் போது பக்கவாட்டு பற்களும், திசுக்களும் பாதிக்கும். ஆனால், லேசர் சிகிச்சையில் பக்கவாட்டு திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவு.



சிகிச்சை மிக விரைவாக முடிக்கப்பட்டு, புண் வேகமாக குணமாகிவிடுவதால் சிகிச்சை செய்த அன்றே உங்கள் அலுவலகப் பணியைத் தொடரலாம்.

ஹைய்யா... இது சூப்பரா இருக்கே! என்கிறீர்களா? இன்னும் இருக்கு!

சிலருக்கு பற்கள் ஒரே சீராக இல்லாமல் ஒழுங்கற்று இருக்கும். சிலருக்கு பற்கள் சரியான அளவில் இருந்தாலும் ஈறுகளின் அகலம்

அதிகமாகவும் (Excess gum and bone tissue) ஈறுகளின் வரிசை ஒழுங்கற்றும் இருக்கும். பேசும்போதோ, சிரிக்கும்போதோ ஈறுகளும் வெளியே தெரியும்.

இவர்களுக்கு ஒவ்வொரு பல்லுக்கும் மேல் உள்ள ஈறுப்பகுதியில் லேசர் சிகிச்சை மூலம் நீண்ட நாட்கள் நீடிக்கக்கூடிய செயற்கை ஈறுகள் பொருத்தப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு Crown lengthening என்று பெயர். 2 மி.மீ. முதல் 3 மி.மீ. வரை தெரிந்தால் நார்மலாக இருக்கும்.

3 மி.மீட்டருக்கு மேல் ஈறுகள் வெளியே தெரிந்தால் பார்க்க அழகாக இருக்காது. பலர் முன்னிலையில் சிரிப்பதையே சங்கடமாக உணர்வார்கள். அவர்களின் தன்னம்பிக்கை வெகுவாக குறையும்.

Gingivoplasty எனப்படும் பல் சிகிச்சை முறையில் பற்களைச் சுற்றியுள்ள அதிகப்படியான ஈறுகள் மாற்றியமைக்கப்படுகின்றன.

ஈறுகள் சீரமைப்பு சிகிச்சையை லேசர் கொண்டு செய்யும்போது அனஸ்தீசியா கொடுக்கத் தேவையில்லை. ரத்தக்கசிவு குறைவாக இருப்பதால் காயங்கள் விரைவில் ஆறிவிடும்.

ஈறுகளின் நிறம் இயற்கையாக பிங்க் கலரில் இருந்தால்தான் அழகு. அதிகப்படியான மெலனின் படிவதால் சிலருக்கு ஈறுகளில் கறுப்பு திட்டுகள் தோன்றி முற்றிலும் கறுப்பாகிவிடும்.

இவர்களுக்கு Gum depigmentation எனப்படும் காஸ்மெடிக் பல் சிகிச்சை முறையில் கறுப்பு நிறத்தில் உள்ள ஈறுகளை இயற்கையான பிங்க் நிறமாக மாற்ற முடிகிறது. நவீன லேசர் சிகிச்சை முறையால் மட்டுமே இது சாத்தியம்.



நம்மில் பலருக்கு பல் சம்பந்தமான நோய்கள் வர எலும்புகளிலும் திசுக்களிலும் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளே காரண மாகின்றன. இதில், புகை பிடிப்பவர்கள், 

பற்களை சுகாதாரமாக பராமரிக் காதவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக பல் நோய்களால் பாதிக்கப் படுகின்றனர்.

இப்போது அறுவை சிகிச்சையின்றி, பற்களைச் சுற்றியுள்ள ஆழமான பகுதிகளிலும், பற்களின் வேர்ப்பகுதியிலும் லேசர் சிகிச்சையில் சுத்தம் செய்ய முடிகிறது.

பற்களில் படிந்துள்ள காரை களையும் ஈறுகளில் மறைந்துள்ள பாக்டீரியாக் களையும் எளிதில் நீக்கிவிடலாம். 

Periodontal laser சிகிச்சை மூலம் பழுதடைந்த பற்திசுக்களை கத்தி மூலம் வெட்டி பிளக்காமலேயே லேசர் ஒளிக்கற்றைகளை செலுத்தி அகற்றி விடுவதும் சுலபம்.. டாக்டர் ப்ரியா பிரபாகரன் - நன்றி குங்குமம் டாக்டர்.
Tags:
Privacy and cookie settings