பேஸ்புக்கில் லைக் பட்டனோடு மேலும் 5 பட்டன்கள் அறிமுகம் !

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் லைக் பட்டனோடு சேர்த்து புதிய பட்டன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லவ், ஹா ஹா, வாவ், சேட், அங்க்ரி என கூடுதலாக 5 பட்டன்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. 
பேஸ்புக்கில் லைக் பட்டனோடு மேலும் 5 பட்டன்கள் அறிமுகம் !
ஃபேஸ்புக்கில் நண்பர்கள் பகிரும் பதிவுகளுக்கும், படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் பின்னூட்டம் இடும் வசதியும், விரும்பும் (லைக்) வசதியும் இதுவரை இருந்துவந்தது. 

நீண்ட காலமாக, பிடிக்காத பதிவுகளுக்கு அன்லைக் (விரும்ப வில்லை) என்ற பட்டனை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்த வேண்டும் என பல பயனாளர்கள் கோரி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இதற்கு மாற்றாக, லைக் பட்டனோடு சேர்த்து இன்னும் 5 தெரிவுகளை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் குறியீடுகளாக தம்ஸ் அப் வடிவம், இதய வடிவம், வாய்விட்டு சிரிக்கும் ஸ்மைலி, ஆச்சரியமாகப் பார்க்கும் ஸ்மைலி, சோகமான ஸ்மைலி மற்றும் கோபமான ஸ்மைலி ஆகியவை தரப்பட்டுள்ளன. 

வழக்கமாக இருக்கும் லைக் பட்டன் மேல் மவுஸைக் கொண்டு சென்றால் இந்த தெரிவுகள் தோன்றும். இந்த புதிய அம்சத்துக்கு ஃபேஸ்புக் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Tags:
Privacy and cookie settings