முதல்வர் மாநில இளைஞர் விருது...விண்ணப்பிக்க !

சமுதாய வளர்ச்சிக்குச் சேவை யாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் ‘முதல்வர் மாநில இளைஞர் விருது’ வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. 
அதன்படி, 2015-16ம் ஆண்டுக்கான முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.


15 வயது முதல் 35 வயது வரையுள்ள இரு பாலரும் இந்த விருதைப் பெற விண்ணப் பிக்கலாம். 

விருதுக்கு விண்ணப்பிப்ப வர்கள் சமுதாய நலனுக்காகத் தொண்டாற்றி யிருக்க வேண்டும்.

அந்தத் தொண்டு சமூகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தி யிருக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி, பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுப் பணிகளில் உள்ளவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி யுடையவர்கள். 


விருதுக்கான விண்ணப் பத்தினை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். 

www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேரக் கடைசி நாள் 20.6.2016.
Tags: