குடியுரிமை... குடி உரிமை... இதில் மயக்கம் தருவது !

வோட்கா அருந்தி விட்டு நடனம் ஆடலாம். தரைக்கு ஒன்றும் ஆகாது. வோட்கா அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால்? தலைக்கு என்னென்னவோ ஆகலாம்!
குடியுரிமை... குடி உரிமை... இதில் மயக்கம் தருவது !
108 ஆம்புலன்சில் எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீஷியன் பணியில் இருக்கிற சிலர் முகம் பார்க்கும் கண்ணாடியும் வைத்திருப்பது உண்டு. ஒப்பனை செய்து கொள்வதற்காகவா? இல்லை... குடிகாரர்களைக் காப்பாற்றுவதற்காகத் தான்! 

விபத்தில் காயம் ஏற்பட்ட போதை ஆசாமிகளுக்கு முதலுதவி / சிகிச்சை அளிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. 

எவ்வளவு தான் அடிபட்டிருந்தாலும், அவர்கள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். வீட்டுக்குப் போறேன்... என்னை விட்டுடுங்க’ என்றே பிதற்றுவார்கள்.

தலைக்காயம் ஏற்பட்டவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அதனால்தான் கைவசம் இருக்கிற கண்ணாடியில் அவர்களின் ரத்தக்களறி திருவுருவத்தைக் காட்டி, உண்மை நிலையைப் புரிய வைப்பதுண்டு.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது என்பது அபாயகரமானது மட்டுமல்ல... அடிபட்டு கிடக்கும் போதையாளர்களுக்கு சிகிச்சை அளிப்பது பொறுமையை இழக்கச் செய்யக்கூடியது... 
குழப்பங்கள் பல கொண்டது... மருத்துவர்களுக்கும் அவசர கால பணியாளர்களுக்கும் மனச்சோர்வை அளிக்கக்கூடியது... சிலருக்கு சினமும் ஊட்டக்கூடியது!  

‘அவர்களை நாங்கள் மிகமிகப் பொறுமையுடன் குழந்தைகள் போலத்தான் பாவிக்க வேண்டியிருக்கும். 

சற்றே நடமாடக்கூடிய சூழ்நிலையில் இருந்தால், சடாரென மருத்துவமனையை விட்டே நகர்ந்து விடுவார்கள். 

அவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்கும் வரை கூடுதல் கண்காணிப்பும் தேவைப்படும்...’ என்பதுதான் போதையில் விழுந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கிற பல மருத்துவர்களின் அனுபவம்.
குடியுரிமை... குடி உரிமை
இது மட்டுமே பிரச்னை அல்ல... அவர்களுக்கு ஒருவேளை அனஸ்தீஷியா கொடுக்க வேண்டியிருந்தால், அது மிகப்பெரிய ரிஸ்க் ஆக இருக்கும். 

ஆல்கஹாலின் தாக்கம் உடலில் இருக்கும் சூழலில், காயமும் ஏற்பட்டிருந்தால், உடனடியாக சிகிச்சை அளிப்பதும் சிரமம்... அளிக்காமல் இருந்தாலோ, உயிரையே இழக்கும் நிலை உருவாகும். 

போதை இன்னும் தெளியாத சூழலில் அவரது மருத்துவ வரலாறைப் பெற்று, அதற்கேற்ப சிகிச்சை அளிப்பதும் இயலாத செயலாகும்.

அதோடு, சாதாரணமான சிறிய கால் எலும்பு முறிவு கூட, குடி காரணமாக நுரையீரல் தொற்றுக்கு வழி வகுத்து அபாயத்தில் தள்ளி விடும்.
இரவு நேரங்களில் பெரும்பாலும் இது போன்ற ஆசாமிகளோடு போராடுவதே பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை உருவாக்குகிறது. 

இந்த மன அழுத்தம் காரணமாக சில மருத்துவர்களும் குடிநோயாளிகளாக மாறியது இன்னும் கொடுமை.

போதையில் இருக்கும் நிலையில் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால் என்ன ஆகும்? மதுவும் அனஸ்தீஷியாவும் மூளையில் ஏறக்குறைய ஒரே விதமான விளைவையே ஏற்படுத்தும். 

உணர்ச்சியற்றுப் போதல் என்கிற நிலைதான் அது. மது உள்ளிருக்கையில் அனஸ்தீஷியாவும் கொடுக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டால், ஒட்டு மொத்த விளைவு என்னவாக இருக்கும் என கணிக்கவே முடியாது.

எதிர் விளைவுகள் பாதகம் ஆகாமல் இருக்கும் வகையில் மெல்ல மெல்லத்தான் அனஸ்தீஷியாஅளிக்க வேண்டியிருக்கும். 

அவசர கால சிகிச்சையில் இது எவ்வளவு டென்ஷன் ஆன விஷயம் என்பது அந்த நான்கு சுவர்களுக்குள் இருப்பவர்களுக்கே தெரியும். 

தலைக்காயத்தோடு வருகிறவர்களை இவ்வளவு பொறுமையாக டீல் பண்ண முடியாதே... அது தலை போகிற காரியம் ஆயிற்றே... 

தலையில் காயம் ஏற்பட்டால், உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, மண்டை ஓடும் வீங்கி விடும்.மற்ற பகுதிகளில் வீங்குவதால் பெரிய பிரச்னை இல்லை. 

மண்டை ஓடு வீங்கினாலோ, மூளை அழுத்தப்படும். இது நிரந்தரமான பாதிப்பையோ, மரணத்தையோ ஏற்படுத்தி விடும். 
மயக்கம் தருவது
அதனால், உடனடியாக மண்டை ஓட்டில் துளைகள் இட்டு, வீக்கத்தைக் குறைக்க வேண்டி இருக்கும். பாதிக்கப்பட்டவர் குடித்திருந்தாலோ, அனஸ்தீஷியா கொடுக்க முடியாது போய், 

இந்த சிகிச்சையை தொடங்க முடியாது. குழப்பமே மிஞ்சும். பொதுவாக, குடித்து விட்டு வாகனம் ஓட்டி அடி படுகிறவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டிருக்கவும் கூடும்.

விபத்தைத் தொடர்ந்து, வாந்தி ஏற்பட்டால், மூச்சுக் குழாயில் உணவுத் துகள்கள் சிக்கிக் கொள்ளும் அபாய மும் உண்டு. இதனால் என்ன ஆகும்? நுரையீரல் தொற்று ஏற்படும் 

அல்லது ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாகி, ரத்தக் குழாய்கள் தளர்ந்து விடும். இதனால் மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகமாகி, குடிநோயாளியின் உயிருக்கே இழப்பாகும்.

குடி... விபத்து... காயம்... சிக்கல்!

நோயாளியைப் பற்றிய எந்த முன் விவரமும் (நீரிழிவு, முந்தைய சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், அலர்ஜி...) மருத்துவருக்குத் தெரியாமல் போகிறது. 

இதனால் சிகிச்சை குழப்பங்கள் ஏற்படுகின்றன. குடி விபத்து நோயாளிக்கு நீரிழிவோ, ரத்தக் கொதிப்போ, இதய நோயோ இருந்தால் சிக்கல்கள் கூடுதலாகத் தொடங்குகின்றன.

பழைய வரலாறு தெரியாததால் அனஸ்தீஷியா அளிப்பது குறித்த தீர்க்கமான முடிவுக்கு நிபுணரால் வர இயலாது. 

அனஸ்தீஷியாவும் ஆல்கஹாலும் மூளையில் ஒரே விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. ஒரே நேரத்தில் அனஸ்தீஷியாவும் ஆல்கஹாலும் உடலில் சேரும் போது என்ன நிகழும் என்பதைக் கணிக்க முடியாது.

எதிர் விளைவு இல்லை என்பது உறுதியாகும் வரை மருத்துவர்களால் முறையான சிகிச்சையை தொடங்க முடியாது. ஆனால், ஒவ்வொரு நொடி தாமதமும் உயிரைப் பிரித்துச் செல்லும்.
நிமோனியா அல்லது தீவிர சுவாசப் பிரச்னைகள்
தீவிர தலைக்காயங்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய ட்ரில் சிகிச்சையை அனஸ்தீஷியா அளிக்காமல் தொடங்க முடியாது. 

ஆனால், ட்ரில் போட்டு, துளைகள் வழியாக திரவங்களை வெளியேற்றினால் தான், மூளை அழுத்தப்படாமல் பாதுகாக்கப்படும்.

போதை காரணமாக, வாந்தி எடுக்கும் போது, உணவுத் துகள்கள் மூச்சுக் குழாயில் சிக்கிக் கொள்ளக்கூடும். இதனால் நிமோனியா அல்லது தீவிர சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம்..... நன்றி குங்குமம் டாக்டர்.
Tags:
Privacy and cookie settings