பாம்பே பிளட் குரூப் தெரியுமா?

பொதுவாக மருத்துவ உலகின் கண்டுப்பிடிப்பில் மனிதர்கள் உடலில் A மற்றும் B மற்றும் AB மற்றும் O ஆகிய 


பிரிவுகளில் பாசிட்டிவ் அல்லது நெகடிவ் குருப் ரத்தம் இருப்பதை கேள்விப் பட்டுள்ளோம்.

அதிலும் AB யில் நெகடிவ் குருப் ரத்தம் உள்ளவர்கள் மிகவும் அரிதா னவர்கள்.

இந்நிலையில் பாம்பே பிளட் குரூப் என்ற பெயரில் உடலில் ரத்தம் இருப்பதை டாக்டர்கள் கண்டுப் பிடித்து ள்ளனர்.

இந்த வகை ரத்தம் உள்ளவர்கள் லட்சம் அல்லது கோடியில் ஒருவராக வுள்ளனர்.

O குருப் ரத்தம் உள்ளவர் களின் குடும்பத்தில் உள்ளவர்களில் சிலருக்கு பாம்பே குரூப் ரத்தம்

இருக்கும் வாய்ப் புள்ளதை எச்- ஆஞ்ஜிடன் பரிசோதனை மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது.

கடந்த 1952 ம் ஆண்டு பாம்பே (தற்போதைய மும்பை) மாநகரில் சஞ்சய்பாட்டீல் என்பவரின் உடலில் இருந்து எடுக்கப் பட்ட ரத்தம் 

பரிசோதனை செய்த போது A.B.AB & O குருப் ரத்தங்கள் இல்லாமல், புது வகையான குரூப் ரத்தம் இருப்பதை டாக்டர் ஒய்.ஆர். பேண்டே கண்டுப் பிடித்தார். 

அந்த குரூப் ரத்தத்திற்கு என்ன பெயர் சூட்டுவது என்று யோசித்த போது பாம்பே மாநகரில்

முதல் முறையாக கண்டுப் பிடித்ததால், பாம்பே பிளட் ரத்தம் என்று பெயர் சூட்டப் பட்டது.

மற்ற குரூப் ரத்தத்தில் இருப்பது போல் பாம்பே பிளட்டிலும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் குரூப் ரத்தம் இருப்பதும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 


பாம்பே பிளட் குரூப் கண்டுப் பிடிக்கப்பட்டு கடந்த 64 ஆண்டுகளில் கர்நாடகாவில் 75 பேருக்கு மட்டும்

அந்த குரூப் ரத்தம் இருப்ப தாகவும், அதில் 24 பேர் பெங்களூரில் உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. 

இந்த வகை ரத்தம் உள்ளவர்கள் தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் அதிகம் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings