மாலத்தீவு முன்னாள் துணை அதிபருக்கு 10 ஆண்டு சிறை !

முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறி அவர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித் துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு யாமீன் அப்துல் கயூம் அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 4-வது மிக முக்கிய அரசியல் தலைவர் அதீப் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அதிபர் முகமது நஷீத், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முகமது நசிம் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர் ஷேக் இம்ரான் அப்துல்லா ஆகிய 3 பேருக்கு ஏற்கெனவே சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இதில் நஷீத் மட்டும் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். மற்றவர்கள் மாலியில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அதீப் மீது அந்நாட்டு அதிபர் கயுமை கொல்ல முயன்றதாக மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
Tags:
Privacy and cookie settings