தூக்கத்தில் உளருபவரா நீங்கள்?

என் மகன் தூக்கத்தில் அவனுக்கே தெரியாமல் தெளிவற்ற வார்த்தை களால் முணு முணுக்கிறான். சிலநேரம் ஊளை யிடுவது போல பயங்கரமாகக் கத்துகிறான். 
தூக்கத்தில் உளருபவரா


வேடிக்கையாக இருந்தாலும் பயமாகவும் இருக்கிறது. தூக்கத்தில் பேசுவது ஒரு நோயா? இதை சரிசெய்ய முடியுமா?

ஐயம் தீர்க்கிறார் மனநல மருத்துவர் கீர்த்திபாய்...இதை ‘நைட் டெரர்ஸ்’ என்று சொல்வோம். உங்கள் மகன் பள்ளி செல்லும் பருவத்தில் இருப் பவரானால், இது அவருடைய உணர்ச்சி பதற்றத்தின் (Emotional anxiety) வெளிப்பாடே. 

ஏதாவது பயங்கரமான கனவு கண்டாலோ, தூங்கும் முன்பு திகில் படம் பார்ப்பதாலோ கூட, தூக்கத்தில் கத்தக்கூடும். நீண்ட நாட்களாக இந்த பழக்கம் தொடர்கிறது என்றால், பள்ளியில் ஏதாவது பிரச்னையை சந்தித்தி ருக்கலாம்.

போர்டு எக்ஸாம் எழுதுபவராக இருந்தால் தேர்வு பயமாகவும் இருக்கும். சில நேரங்களில் உடன் பயிலும் மாணவர்கள் மற்றும் வகுப்புக்கு புது ஆசிரியரின் வரவு கூட இவரை மனதளவில் பாதித்தி ருக்கலாம்.

மகனது ஆசிரியரை சந்தித்து பிரச்னைக்கான காரணங்களை கேட்டு தெரிந்து கொண்டு பெற்றோராகிய நீங்களே அவரது பயத்தைப் போக்க முடியும். 
தூங்குவதற்கே பயப்படும் சூழல்


உங்களால் அவனது பயத்தை போக்க முடிய வில்லை என்கிற போது மனநல நிபுணரிடம் அழைத்துச் சென்று ஆலோசனைகள் வழங்கு வதன் மூலமும், அமைதி சிகிச்சை (Relaxation therapy) அளிப்பதன் மூலமும் சரி செய்து விட முடியும்.

இதை கவனிக்காமல் விட்டு விட்டால் உங்கள் மகன் தூங்குவதற்கே பயப்படும் சூழல் ஏற்படும். அதனால் ஆரம்பத் திலேயே தகுந்த ஆலோசனை வழங்குவது அவசியம்.

பொதுவாகவே, மனக் குழப்பம், தூக்க நடத்தை பிரச்னை போன்ற உளவியல் ரீதியான பிரச்னை இருப்பவர்கள் இவ்வாறு தூக்கத்தில் பேசுபவர் களாக இருப்பார்கள். 

இது நீண்டநாள் பிரச்னையோ, தீர்க்க முடியாத பிரச்னையோ இல்லை. தகுந்த மருத்துவ உதவி வழங்கப்படும் போது இதிலிருந்து விரைவிலேயே வெளிவர முடியும்.
Tags:
Privacy and cookie settings