பி.இ. படிக்க வேண்டுமா.. ஆன்-லைனில் பதிவு செய்யுங்க !





பி.இ. படிக்க வேண்டுமா.. ஆன்-லைனில் பதிவு செய்யுங்க !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
பி.இ., பி.டெக் போன்ற படிப்புகளில் சேர விரும்புபவர்கள் மே 24 -ம் தேதிக்குள் தங்களது பெயர்களை ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். 
இதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட் டுள்ளது.


தமிழகத்தி லுள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கையை அண்ணா பல்கலைக் கழகம் நடத்துகிறது. 

பி.இ. கவுன்சிலிங்கில் பங்கேற்க மாணவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்யவேண்டும். இதற்கு வரும் 24-ம் தேதி கடைசி நாளாகும். 

2016-17ஆம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் முழுவதையும்

ஆன்-லைன் முறையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்தாண்டு அறிமுகம் செய்தது. ஏப்ரல் 15-ஆம் தேதி இதற்கான பதிவு தொடங்கியது.

ஆன்-லைன் பதிவு செய்ய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.


இதன்படி, மே 17 வரை 1,80,646 பேர் பதிவு செய்திருந்தனர். 
இந்த நிலையில், விண்ணப்பத்தை பதிவு செய்ய மே 24 வரையும், விண்ணப்பத்தைப்

பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க மே 27 வரையும் மேற்கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.