ரகசிய குறியீடு உருவாக்குவது எப்படி?

நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக் கோடுகள் எனப்படும் பல


தொடர் கோடுகளா லான ரகசியக் குறியீடுகள் அச்சிடப் பட்டிருப்பதை நாம் அனைவரும் பார்த்திருக் கின்றோம்.

பெரும் பாலானவர்களிற்கு அந்தக் கோடுகள் எதற்க்காக அச்சிடப் பட்டுள்ளது என்றும்

அந்த ரகசியக் குறியீட்டினுள் அப்படி என்ன தான் இருக்கிறது என்றும் தெரிவதில்லை.

இந்த ரகசியக் குறியீடுகள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் முழுமையாக ஆராய்வதே இந்தப் பதிவின் நோக்கம். 

விற்பனைப் பொதிகளில் அச்சிடப்படும் இந்த ரகசியக் குறியீடுகள் ஆங்கிலத்தில் Barcodes என அழைக்கப்படும்.

Barcode என்பது குறிப்பிட்ட பொருட்களின் மீது அதுபற்றிய சில தகவல் களைக் காண்பிக்கும் ஒரு குறியீடாகும்.

இவ் Barcodes இனுள்ளே அது அச்சிடப் பட்டுள்ள உரிய பொருளிற்கான விலை, உற்பத்தி தேதி, காலாவதி தேதி, அப்பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் இணைய முகவரி 

போன்ற தகவல்கள் உள்ளடக்கப் பட்டிருக்கும். இவற்றை நம் வெறும் கண்ணினால் பார்த்து அறிய முடியாது.

இவற்றை Barcode Scanner கள் மூலமாகவே வாசித்து அறிய முடியும்.

இந்த ரகசியக் குறியீட்டினை Barcode Scanner இற்கு முன்பாக பிடித்தால் போதும்,


இரகசியக் குறியீட்டிற்குள் ஒழிந்திருக்கும் இரகசிய விடயங்கள் அனைத் தையும் அறிந்து விடலாம்.

ஆனால் தற்போது Barcode Scanner களைப் போலவே கையடக்கத் தொலை பேசிகளும்

இந்த இரகசியக் குறியீடுகளை இனங்கண்டு கொள்ள பெரிதும் உதவுகின்றன.

குறித்த இரகசியக் குறியீட்டினை கையடக்கத் தொலை பேசியின் கமராவினால் Scan செய்து

அதனுள் மறைக்கப் பட்டுள்ள அனைத்து விடயங் களையும் அறிந்து விடலாம்.

இதற்காகவே பெரும்பாலான கையடக்கத் தொலை பேசிகளில் (Smart Phones)

இவ் Barcode களை வாசிப்பதற் க்குரிய மென்பொருள் காணப்படுவது பயனுடையதொரு விடயமாகும்.

மேலும் கையடக்கத் தொலைபேசி யில் இவ்மென் பொருள் இல்லை யென்றால் இணையத்தி லிருந்து இலவசமாக Download செய்து நிறுவிக் கொள்ளலாம்.

இரகசியக் குறியீடுகளை வாசிப்பது பற்றி அறிந்து விட்டோம்,

அடுத்ததாக பார்க்க போகும் விடயம் அனைவரிற்கும் நிச்சயமாகப் பிடிக்கும்.

எமது அடிப்படை விபரங்களை (பெயர், தொலைபேசி இலக்கம், முகவரி, மேலும் பலவற்றை)

புகுத்தி எமக்கென்று ஒரு இரகசியக் குறியீட்டினை உருவாக்கிக் கொள்ளலாம்.


Barcodes பல வகைப்படும், அவற்றுள் QR Code (  Quick Response Code ) என்ற Barcode வகையே பாவனைக்கு இலகுவான தாகும்.

எனவே “QR Code Generator” என Google இல் Type செய்து தேடினால் இவ் Barcode இனை

இலவசமாக உருவாக்கித் தருகின்ற பல இணைய தளங்கள் உங்கள் முன் தோன்றும்.

அவற்றில் ஏதாவதொரு இணைய தளத்திற்கு சென்று உங்கள் இரகசியக் குறியீட்டினுள் நீங்கள் உள்ளடக்க விரும்பும் விடயங்களை வழங்கினால் போதும், 

உடனே உங்களிற்குரிய இரகசியக் குறியீடு தயாராகி விடும்,

அதனை நீங்கள் புகைப் படமாக Download செய்து அதனை அச்சிட்டு (Print எடுத்து) பெற்றுக் கொள்ளலாம்.
இவ் இரகசிய குறியீட்டினுள் அதிக பட்சமாக 250 சொற்கள் கொண்ட தகவல் களை உள்ளடக்க முடியும் என்பது பிரமிக்கத் தக்கவொரு விடயமாகும்.

இந்த Barcode 1948 இல் தான் முதன் முதலாக பயன் பாட்டிற்கு வந்தது. Barcode ஆனது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப் படுகிறது.

வைத்திய சாலையில் நோயாளிகளின் மணிக்கட்டுப் பகுதியில் இணைக்கப் பட்டிருக்கும் Barcode இன் மூலம் குறித்த


நோயாளியின் முழுத்தகவல் களையும் மருத்துவ மனையில் பணியாற்று பவர்களினால் இலகுவாக அறிந்து கொள்ளக் கூடிய தாகவுள்ளது. 

வாடகை கார்கள், விமானப் பயணப்பெட்டி, அணுக்கருக் கழிவு, அஞ்சல் மற்றும்

பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்களின் நகர்வைக் கண்காணி ப்பதிலும் பயன் படுகிறது.
Tags: