வாழைப்பழ தோலில் உள்ள நன்மைகள் !

வாழைப்பழ தோலை இதுவரை தூக்கி எறிந்து விட்டு சாப்பிடுவதை விட வாழைப்பழ தோலையும் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. வாழைப்பழ தோலில் எண்ணற்ற ஊட்டச் சத்துக்கள் இருக்கின்றன. 

வாழைப்பழ தோலில் உள்ள நன்மை


மேலும் வாழைப்பழ தோலில் இருக்கும் சத்துக்கள் பல உடல் நலக்கோளாறு களுக்கு தீர்வாகவும் அமைகிறது.

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

பற்கள் பளிச்சிட, எலும்புகளின் வலுவை அதிகரிக்க, இதயம், மூளை சார்ந்த பிரச்சனைகள் எழாமல் இருக்க, உடல் எடையை குறைக்க,

மனநிலை மேலோங்க என பல வகையில் உடல் நலத்தை வெகுவாக ஊக்கு விக்கிறது வாழைப்பழ தோல்.

ஊட்ட சத்துக்கள்

வாழைப்பழ தோலில் அதிகளவில் வைட்டமின் பி6, பி12 மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் போன்றவை உள்ளன.

ஊட்ட சத்துக்கள்


பற்கள் மற்றும் எலும்பின் வலு

வாழைப்பழ தோலில் இருக்கும் வைட்டமின் ஏ பற்கள், எலும்பு மற்றும் திசுக்களின் வலுவை அதிகரிக்க உதவுகிறது

என்று சமீபத்திய ஆய்வின் மூலம் ஆய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர். மேலும் இது பற்களை வெண்மை யாக்கவும் இது உதவும்.

நோய் எதிர்ப்பு

தோலில் இருக்கும் வைட்டமின் பி6 உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், மூளை மற்றும் இதயத்திற்கு வலு சேர்க்கிறது. இது மட்டுமின்றி இரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்துக் கொள்ள வாழைப்பழ தோல் உதவுகிறது.

நரம்பு மண்டலம்

வாழைப்பழ தோலில் இருக்கும் வைட்டமின் பி12 நரம்பு மண்டலத் திற்கு பக்கபலமாக இருக்கிறது

மற்றும் இதன் வைட்டமின் பி 2 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி உடல் எடையைக்குறைக்க உதவுகிறது.

வைட்டமின் பி12


வைட்டமின் சி

வாழைப்பழ தோலில் இருக்கும் வைட்டமின் சி யின் சத்து புதிய திசுக்கள் மற்றும் தசைநார்கள் வளர உதவுகிறது. மற்றும் இதிலிருக்கும் நார்ச்சத்து சருமத்திற்கு நல்லது.

மனநிலையை மேலோங்க வைக்க

வாழைப்பழ தோல், மனநிலையை மேலோங்க வைக்க உதவும் ஹார் மோனான செரோடோ னினை ஊக்கு விக்கிறது.

கொலஸ்ட்ரால் குறையும்

வாழைப்பழ தோல் கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு மற்றும் இதய கோளாறு கள் ஏற்படாமல் இருக்க பயனளிக்கிறது .
கொலஸ்ட்ரால் குறையும்


கண்பார்வை

இதில் இருக்கும் இதர சில மூலப் பொருட்கள் கண் பார்வை அதிகரிக்க உதவுகிறது.

கொசுக்கடிக்கு மருந்து

வாழைப்பழ தோலை உட்புறம் வெளியாக கொசுக் கடித்த இடத்தில் தடவுவது, கொசு கடிக்கு சிறந்த மருந்து என்று கூறப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings