ஜடேஜா திருமண விழாவில் துப்பாக்கி சூடு !

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், மெக்கானிக்கல் என்ஜினீயர் ரிவா சோலங்கிக்கும் இரு மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இவர்களது திருமணம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, வெய்ன் பிராவோ உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக ரவீந்திர ஜடேஜா மணக்கோலத்தில் குதிரையில் அழைத்து வரப்பட்ட போது, சில அடி தூரத்தில் நின்ற அவரது உறவினர்களில் ஒருவர் திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. உடனடியாக அங்கு வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

ராஜ்கோட் புறநகர் பொலிஸ் சூப்பிரண்டு ஆன்ட்ரிப் சூட் கூறும் போது, ‘அந்த நபர் துப்பாக்கி வைத்திருப்பதற்கு உரிய உரிமம் பெற்றிருக்கிறாரா இல்லையா? என்பது குறித்து முதற்கட்டமாக விசாரணை நடத்தினோம்.
விசாரணைக்கு பிறகு எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்வோம். துப்பாக்கிக்கு லைசென்ஸ் வைத்திருந்தாலும் கூட தற்காப்பு நடவடிக்கையை தவிர்த்து மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்துவது சட்டத்துக்கு புறம்பானதாகும்’ என்றார்.
Tags:
Privacy and cookie settings