இந்தியாவின் இரும்பு பெண் யாஸ்மின் மனாக் !

யாஸ்மின் மனாக், இவர் 36 வயதுடைய பெண் மட்டுமல்ல IBBF (Indian Body Building Federation) ஆல் மிஸ் 2016ஆக தேர்வு செய்யப்பட்ட பெண். 
ஒரு சராசரி பெண்ணைப் போல காட்சியளிக்கும் இவர், கடந்த 17 வருடமாக பளு தூக்குதலில் (weight lifting) ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை யாஸ்மின் 2 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார்.

இவர் கூறுகையில், ஆண்கள் மட்டுமே அநேகமாக இருக்கும் இத்துறையில் பயணம் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகத் தான் இருந்தது. 

ஆனால், என் வீட்டாரும், நண்பர்களும் என்னை மிகவும் ஊக்கப் படுத்தினார்கள். பல பேர் என்னை பற்றி பல விதமாகப் பேசினாலும் நான் அதை கண்டு கொள்ளாமல் வந்ததே என் வெற்றிக்கு காரணம்.

மேலும், சராசரி பெண்ணாக இருப்பது மிகவும் போர் அடிக்கும் ஒரு விஷயம். எனக்கு பளுதூக்குதல் மிகவும் பிடிக்கும். ஏற்கெனவே மற்ற ஆண்களை விட அதிக சதை உள்ளது.

தற்போது யாஸ்மின் குர்கௌனில் 300-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயிற்சி அளிக்கும் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் இப்போது 2016-ல் பூட்டானில் நடக்கவிருக்கும் Asian Bodybuilding and Physique Championship ல் கலந்து கொள்வதற்கு கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

இவர் இன்னும் பல தங்க பதக்கங்களை வெல்ல வாழ்த்துக்கள்!
Tags: