கொல்லம் தீ விபத்தில் தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் உபயோகம் !

109 பேரை பலி கொண்ட கொல்லம் தீ விபத்தில், தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் 
பரவூர் என்ற இடத்தில் உள்ள புட்டிங்கல் என்ற அம்மன் கோவில் திருவிழாவின் போது, பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தால் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்தனர். 

383 பேர் பலத் தீ காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பட்டாசு வெடிக்கும் நிகழ்வின் ஒப்பந்ததாரர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சுரேன்தரன் மற்றும் கிருஷ்ணன் குட்டி என்ற இருவர் பட்டாசு வெடிக்கும் நிகழ்வுக்கு ஒப்பந்தம் பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் கோயில் நிர்வாகத்தினர் 15 பேர் உட்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே வெடி மருந்து பொருட்களின் தலைமை கட்டுபாட்டாளர் சுதர்ஷன் கமல் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் விபத்து நடந்த இடத்தையும் வெடிபொருட்களையும் ஆய்வு செய்தனர். 

புட்டிங்கல் கோயிலில் பட்டாசு வெடித்ததில், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக சுதர்ஷன் கமல் கூறினார்.
Tags:
Privacy and cookie settings