கேரள தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் இழப்பீடு !

கொல்லம் அருகே பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி கோவில் தீவிபத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இவர்கள் திருவனந்தபுரம், கொல்லம், பரவூர், திருவாங்கூர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
 
கொல்லம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து தீவிபத்து நிகழ்ந்த புட்டிங்கல் தேவி கோவில் பகுதிகளையும் பார்வையிட்டார். 

இந்நிலையில் தனது தேர்தல் பிரசார கூட்டத்தை ரத்து செய்து விட்டு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 

சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடியும் பார்வையிட்டார். அப்போது முதல்வர் உம்மன் சாண்டி உடனிருந்தார். 

பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என கேரள முதல்வர் உம்மண் சாண்டி அறிவித்துள்ளார்.

படுகாயமடைந்தவர்களுக்கு, தலா 2 ட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

அதேபோல், பிரதமர் மோடி அறிவித்துள்ள நிவாரணத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 2லட்சமும், காமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings