கோவிலுக்குள் சுடிதார் அணிந்து சென்ற என்னை கொல்ல முயன்றார்கள் திருப்தி தேசாய் !

மும்பையில் உள்ள மகாலட்சுமி கோயிலுக்கு சுடிதார் அணிந்து சென்ற பூமாதா அமைப்பு தலைவி திருப்தி தேசாயை கொலை செய்ய நடைபெற்ற முயற்சியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மும்பை கோலாப்பூரில் உள்ள மகாலட்சுமி கோவிலில் பெண்கள் சேலை மட்டுமே அணிந்து செல்ல அனுமதி உள்ளது. இதற்கு பூமாதா என்ற பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இந்த நிலையில், கோவில் நிர்வாகத்தின் தடையை மீறி சுடிதார் உள்ளிட்ட மற்ற ஆடைகளை அணிந்து மகாலட்சுமி கோவிலுக்குள் திருப்தி தேசாய் தலைமையிலான பூமாதா அமைப்பினர் நுழைய முயன்றனர். 

 அங்கு ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் பூமாதா பெண்கள் அமைப்பினரை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

ஆனால் அவர்கள் போலீசாரையும் மீறி கோவிலுக்குள் நுழைய முயன்றனர். இதனை தொடர்ந்து கோலாப்பூர் கிராம மக்களுக்கும் பூமாதா அமைப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

அங்கு ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து திருப்தி தேசாய் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கிரமத்தினருடன் ஏற்பட்ட மோதலில் திருப்தி தேசாய் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 
http://www.ethanthi.com/2016/04/blog-post_607.html
அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவிலுக்குள் நுழைய முயன்ற தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக திருப்தி தேசாய் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings