வங்கி உங்களிடம் மறைக்கும் விஷயங்கள் !

சேமிப்பு, செலவு, கடன், வீடு கட்ட மற்றும் நகைகளை பாதுகாக்க என பல்வேறு சேவைகளை நமக்கு வங்கிகள் அளித்து வருவதால், அவை நமக்கு உதவுவது அவற்றின் கடமை என்றே நீங்கள் எண்ணி யிருப்பீர்கள்.
வங்கி உங்களிடம் மறைக்கும் விஷயங்கள் !
ஆனால் வங்கிகள் தங்களுக்கு எப்படி உதவி செய்து கொள்கின்றன என்று தெரியுமா? இவ்வாறு உதவி செய்யும் போது, 

உங்களுடைய எண்ணத்திற்கு மாறாக, தன்னுடைய விருப்பத்திற்கு வங்கிகள் முன்னுரிமை கொடுக்கும் பட்சத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகின்றன.

இவ்வாறு முரண்பாடுகள் ஏற்படும் 10 விதமான விஷயங் களைப் பற்றி இங்கே தெளிவு படுத்துகிறோம். இந்த விஷயங்களைப் பற்றி வங்கிகளைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் விளக்கி யிருக்க மாட்டார்கள்.
கன்னத்தில் உருவாகும் கவர்ச்சிக் குழி - ஒரு பேரழகு தான் !
இதை நாம் வங்கியா ளர்களிடம் கேட்டு அறிந்து கொள்வது நம்முடைய கடமை.நீங்கள் காசோலையை உங்களுடைய கணக்கில் வரவு வைத்த வுடனேயே அந்த பணம் கணக்கில் வந்து விடாது. 

அதற்கு சிறிதளவு காலம் தேவைப்படும். அது வெளியூர் காசோலை யாக இருந்தால் இந்த கால அளவு சற்றே அதிகமாக இருக்கும். 

2012ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி, மின்மயமாக்கி காசோலைகளை விரைவில் பணமாக்க உத்தர விட்டது.

அது வரையிலும் வெளியூர் காசோலைகளை பணமாக்க குறைந்தபட்சம் 15 நாட்களில் இருந்து 3 வாரங்கள் வரை காலம் இருந்து. 

ஆனால், எவ்வளவு அதிக நாட்கள் கால தாமதமாக உங்களுடைய பணம் கணக்கிற்கு வரவு வைக்கப் படுகிறோ,

அந்த அளவிற்கு வங்கிக்கு இலாபம் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். இந்த பணத்தை எல்லாம் வங்கிகள் தடையற்ற நிதி ஆதாரங்களாக கொண்டிருக் கின்றன. 
வங்கி உங்களிடம் மறைக்கும் விஷயங்கள் !
2011ஆம் ஆண்டில் மட்டும், இவ்வகையில் கணக்குகளில் செலுத்தப்பட்ட காசோலைகளை இ-கிரெடிட் முறையில் செய்வதை தாமாதமாக்கி சுமார் 620 கோடிகள் வரை வங்கிகள் சம்பாதித்துள்ளன.

டெபிட் கார்டு திருடப்படுதல் அல்லது தொலைத்து விடுதல் பற்றி நாம் பேசும் போது டெபிட் கார்டுகளை விட கிரெடிட் கார்டுகள் பாதுகாப்பானவையாக உள்ளன. 

இதனை உங்களுடைய வங்கிகள் உங்களிடம் சொல்வ தில்லை.  எனவே, உங்களுடைய வங்கியினரிடம் பேசி, இவ்வாறு தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ எடுக்க வேண்டிய

பாதுகாப்பு நடவடிக்கை களை அறிந்து கொண்டு, தவறுகள் நடக்காதவாறு உங்களுடைய கணக்கை பாதூகத்துக் கொள்ளுங்கள். 

இவ்வகையி லான எதிர் பார்க்காத சூழல்களை சமாளிப்ப தற்காகவே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பண அட்டை பாதுகாப்பு திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
சங்கு போன்ற கழுத்து வேணுமா?
இது போன்ற சூழல்களுக்கு உங்கள் வங்கி தருவது என்ன என்பதை கண்டறியுங்கள். காசோலை பவுன்ஸ் ஆவது போன்ற மோசமான சூழல்களை மக்கள் எதிர் கொள்ள விரும்புவ தில்லை.

எவ்வளவு செலவு செய்தாவது, இது போன்ற சூழல்களை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்வார்கள்.

இவ்வாறு செக் பவுன்ஸ் ஆவதை தவிர்க்கும் நோக்கில் மிகப்பெரிய தொகைகளை தங்களுடைய நடப்பு கணக்கில் அவர்கள், வங்கிகளுக்கு மிகவும் வசதியாக விட்டு வைப்பார்கள். 

இதன் மூலம், நீங்கள் வங்கிகளின் சேமிப்பு கணக்கில் பணத்தை வைக்கும் போது உங்களுக்கு தர வேண்டிய வட்டியை வங்கிகள் தர வேண்டியிருப்ப தில்லை.
வங்கி உங்களிடம் மறைக்கும் விஷயங்கள் !
பின் தேதியிட்ட காசோலைகள், காசோலைகள் பவுன்ஸ் ஆவதை தவிர்க்க உதவுமா? என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை.

உங்களுடைய கணக்கில் நீங்கள் எதிர் பார்க்கும் அளவு பணம் வரும் என்று எண்ணி, பின் தேதியிட்ட காசோலையை தயார் செய்வீர்கள். 

ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள நாளுக்கு முன்னதாகவே அந்த காசோலையை வங்கிகளில் செலுத்தி பணமாக்கலாம்.

இவ்வாறு செய்யும் போது செக் பவுன்ஸ் ஆகும். நிறைய பிரச்னைகள் வரும். எனவே, இந்த வழிமுறையை கூடிய வரையிலும் தவிர்க்கவும்.
உங்களுடைய கணக்கு தொடர்பாக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அல்லது பரிமாற்றங்கள் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், 

அவ்வாறு செய்வதற்கு பல்வேறு வழிமுறைகளை வங்கிகள் அளிக்கின்றன.

அதாவது, இணைய வழியில் படிவங்களை நிரப்பி கேட்டுக் கொள்ளுதல், வாடிக்கையாளர் சேவையில் கேட்டல் அல்லது வங்கிக்கு நேரடியாக சென்று வருதல் போன்றவை.

ஆனால், இவை எல்லாவற்றிலும் சிறந்த மற்றும் பலன் தரக் கூடிய வழிமுறை நீங்கள் வங்கிக்கு நேரடியாக சென்று வருவது தான் என்பதை வங்கி சொல்வ தில்லை. 

பிற நிறுவனங்களைப் போலவே, நெடுநாட்கள் தங்களிடம் கணக்கு வைத்துள்ள, உண்மையான வாடிக்கை யாளருக்கென சில சலுகைகளை வங்கிகளும் வைத்துள்ளன.

ஆனால், பெரும்பாலான நேரங்களில் வங்கிகள் இந்த விஷயத்தை விளம்பரப் படுத்துவதில்லை.

நீங்கள் தான் அவர்களிடம் கேட்க வேண்டும். சற்றே அழுத்தம் கொடுத்தல், நெடுநாள் வாடிக்கை யாளர்களுக்கு கட்டண விலக்கு களையும் கூட வங்கிகள் தருகின்றன.
வங்கி உங்களிடம் மறைக்கும் விஷயங்கள் !
பல்வேறு வங்கி நிறுவனங் களாலும் இந்த குறிப்பு தரப்பட்டு வருகிறது. காரணம் என்ன தெரியுமா? இந்த பதிவுகளை வைத்திருப்பது ஒரு தானியங்கி செயல் பாடாகும். 

இந்த செயல்பாட்டை வழங்கும் மென்பொருள் சில பிழைகளை உருவாக்கலாம். இந்த பிழையால் ஒரே செயல்பாடு பலமுறை செய்யப் பட்டதாக 'டூப்ளிகேஷன்' ஆகலாம்.

எனவே, அனைத்து இரசீதுகளையும், ஒவ்வொரு முறையும் பத்திரப்படுத்தி வைத்தல் சிறந்தது. வங்கிககளில் பல்வேறு விதமான வட்டி விகிதங் களுடன் கணக்குகள் உள்ளன.

நீங்கள் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் கணக்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய விருப்பமாக இருக்கும். 
எனவே, அவர்கள் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் கணக்குகள் பற்றி விளம்பரப் படுத்த மாட்டார்கள் என்பது ஊரறிந்த உண்மை.

எனவே, அதிக வட்டி விகிதங்கள் உள்ள கணக்குகள் பற்றி அறிய வேண்டியது, உங்களுடைய ஆர்வத்தைப் பொறுத்த விஷயமாக இருக்கும்.

நீங்கள் ஒரு படிவத்தில் கையெழுத்திடும் முன்னர், அதனை முழுமையாக, நன்றாக படித்துப் பார்க்கவும். வங்கி துறையினரால் பயன்படு த்தப்படும் சில வார்த்தைகள் சிலவற்றை அப்போது நீங்கள் படிக்க நேரிடும். 

யாருடைய உதவியையாவது கேட்டு, அந்த வார்த்தை களுக்கான விளக்க ங்களை கேட்டு, புரிந்து கொண்டு பின்னர் கையெழுத்திடவும்

இது வங்கி அலுவலரின் நேரத்தை சற்றே எடுத்துக் கொண்டாலும், பின் வரும் நாட்களில் உங்களுக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கும். நீங்கள் சிறு தொழில் செய்வதற்காக வங்கிகளிடம் கடன் பெற நினைத்தால், 
வங்கி உங்களிடம் மறைக்கும் விஷயங்கள் !
உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். சிறு தொழில் கடன்கள் வழங்குவதில் பல்வேறு வங்கிகளும் பாரபட்சமாக நடந்து கொள்ளவே நினைக்கின்றன. 

அவர்கள் கடனை திரும்ப பெறுவது குறித்து அச்சப்படு கின்றனர். எனவே, இவ்வகையி லான விண்ணப்பங்களை எந்த விலை கொடுத்தாவது நிராகரிக்க முயலுவார்கள்.
Tags: