ரோல்ஸ்ராய்ஸ் கார் பற்றிய அதிசயமான உண்மை !

ரோல்ஸ் ராய்ஸ் கார் என்றாலே ஆடம்பரம், அந்தஸ்தின் சின்னமாக பார்க்கப் படுகிறது. உலகின் விலையுயர்ந்த கார் மாடல் களாகவும் கருதப்ப டுகிறது. 



இருப்பினும், பெரும் செல்வந்தர்கள் தங்களு க்கான பிரத்யேக அடையாளம் மற்றும் தனி த்துவம் வேண்டி சில ரோல்ஸ் ராய்ஸ்களை பெரும் பொருட் செலவில் கஸ்டமைஸ் செய்து வாங்கி யுள்ளனர்.

அதுபோன்று, உலகிலேயே அதிக விலை கொண்ட டாப் 15 ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும், அதன் சிறப்புக ளையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம் சாலிட் கோல்டு (Rolls Royce Phantom Solid gold)

விலை: ரூ.54 கோடி (Price: $8.2 million) வளைகுடா பகுதியை சேர்ந்த பெரும் செல்வ ந்தர்கள் மத்தியில் தங்கம், வைரம் போன்ற வற்றை காரில் பதித்து வாங்கு வதை தங்களின் அந்தஸ்தாக கருது கின்றனர்.
அந்த விதத்தில், அடையாளம் தெரிவிக்க விரும்பாத வாடிக்கையா ளருக்காக ரோல்ஸ் ராய்ஸ் வடிவமைத்து கொடுத்த கார் மாடல் இது. 120 கிலோ கட்டித் தங்கத்தை பல்வே று விதங்களில் கார் முழுவதும் பயன்படுத்தி இழைத் துள்ளனர்.


இந்த விலை மதிப்பு மிக்க காருக்கு பாதுகாப்பு அம்சம் இருக்கும் விதத்தில், குண்டு துளைக் காத வசதிகள், பிரத்யேக துப்பாக்கி பொருத்தப் பட்டு கஸ்டமைஸ் செய்து கொடுக்கப் பட்டுள்ளது.


இதற்கு அரசாங்க த்திடம் இருந்து சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளனர். முகப்பு க்ரில், கதவு கைப்பிடிகள், சக்கரங்கள், பனி விளக் குகள் என பல இடங்களில் தங்கத்தால் இழைக்கப் பட்டிருக் கிறது. இன்றைய மதிப்பில் ரூ.54 கோடி பெறுமானம் கொண்டது.

02. ரோல்ஸ் ராய்ஸ் 10- எச்பி (1904 Rolls Royce 10-HP)

விலை மதிப்பு: ரூ.47.5 கோடி(Price: $7.25 million ) கடந்த 1904ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன வர்களில் ஒருவரான சார்லஸ் ரோல்ஸ் எண்ணத்தில் உருவான கார் மாடல்.


மொத்தமாக 17 கார் மாடல்கள் மட்டுமே தயாரிக்கப் பட்டது. இந்த காரில் 10 எச்பி பவரை அளிக்க வல்ல 1.8 லிட்டர் எஞ்சின், 3 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப் பட்டிருந்தது. பல்வேறு உரிமை யாளர் கையில் மாறினாலும், இன்றும் பொக்கி ஷமாக பாதுகாக்கப் படுகிறது.
03. 1912 ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் கோஸ்ட் (1912 Rolls Royce Silver Ghost ) விலை மதிப்பு: ரூ.19.80 கோடி (Price: $3 million)

சாதாரண மாடல்க ளிலிருந்து இந்த பழமையான ரோல்ஸ் ராய்ஸ் கார் வேறுபடு வதற்கு, இந்த காரில் இடம் பெற்றிரு க்கும் சிறப்பம் சங்கள் தான் காரணம். 


அலாய் வீல்கள், முன்பக்க க்ரில், சைடு மிரர்கள், புகைப்போக்கி குழாய் என பல இட ங்களில் 24 காரட் தங்கம் பயன படுத்தியிரு க்கினறனர். உட்புறத்தில் கைப்பிடிகள், சென்டர் கன்சோல், ஏசி வென்ட்டுகளிலும் தங்கம் பயன்படுத் தியுள்ளனர்.

04. ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம் ட்ராப்ஹெட் கூபே (Rolls Royce Phantom Drophead coupe )

விலை மதிப்பு: ரூ.11.15 கோடி (Price: $1.6 million) எல்டன் ஜான் எய்ட்ஸ் அறக்கட் டளைக்கு நிதி திரட்டும் விதத்தி்ல், இந்த கார் ஏலம் விடப் பட்டது. 


யாருமே எதிர்பா ர்க்காத வகையில், காரின் உண்மையான மதிப்பை விட இருமடங்கு கூடுதல் விலைக்கு ஏலம் போனது.

05. ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம் இயர் ஆஃப் தி டிராகன் எடிசன் விலை (Rolls Royce Phantom ‘Year of the Dragon edition’ )
மதிப்பு: ரூ.7.92 கோடி (Price: $1.2 million) சீன மார்க்கெ ட்டிற்காக வெளியிடப் பட்ட மாடல். அறிமுகம் செய்யப் பட்டு இரண்டு மாதங் களில் விற்று தீர்ந்தது. 2012ம் ஆண்டு சீனாவின் டிராகன் ஆண்டின் நினைவாக இந்த காரை ரோல்ஸ்ராய்ஸ் வெளி யிட்டது.மேலும்,


சீன அரச குடும்ப ங்களின் அடையாளச் சின்னமாக பயன்படுத் தப்படும் டிராகன் என்ற கற்பனை விலங்கின் சின்ன ங்களை பல்வேறு இடங்களில் பொறித்து, சீன பாரம் பரியத்தை கொண்டாடும் விதத்தில், மிகவும் பிரத்யேக மான மாடலாக வெளி யிட்டது.

06. பிஜன் பாக்ஸத் ஸ்பெஷல் எடிசன் (Bijan Pakzad special edition Rolls Royce Drophead coupe )

விலை மதிப்பு: ரூ.6.6 கோடி(Price: $1 million) ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல டிசைனர் பிஜன் பாக்ஸன் எண்ண த்தில் உருவாக்கப் பட்ட மாட ல்தான் ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம் டிராப்ஹெட் கூபே மாடல். 


கடந்த 2010ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப் பட்டு, 2011ல் விற்ப னைக்கு அறிமுகம் செய்யப் பட்டது. வித்தியா சமான மஞ்சள் வண்ணம், பிஜான் பாக்ஸத்தின் கையெழு த்துடன் வந்ததே இதன் சிறப்பு.

07. ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம் ஹியர்ஸ் பி12 (Rolls Royce Phantom Hearse B12 )

விலை மதிப்பு: ரூ.4.02 கோடி உலகின் அதிக விலை மதிப்பு கொண்ட அமரர் ஊர்தி இதுவாகத் தான் இருக்கும். சாதாரண ரோல் ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரில் பல்வேறு மாறுத ல்களை செய்து அமரர் ஊர்தியாக பயன்படுத்தும் விதத்தில் உருவாக்கி யுள்ளனர். 


இந்த கார்23 அடி நீளம் கொண்டது. 2012ம் ஆண்டு தி டேன் எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது. அமரர் ஊர்வல த்துக்கு தேவைப் படும் பல்வேறு வசதிக ளுடன் இந்த காரில் இருக் கின்றன.
08. ரோல்ஸ் ராய்ஸ் ஆல் கார்பன் ஃபைபர் ஃபான்டம் கூபே (Rolls Royce all-carbon fiber Phantom coupe) Price: $420,000 (estimate) :

அமெரிக்கா வின் கலிஃபோர்னியா மாகா ணத்தில் உள்ள சிம்பாலிக் மோட்டார் கார் நிறுவனம், இந்த ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம் காரை பந்தய கார் போன்ற அம்ச ங்களுடன் மாறுத ல்களை செய்தது. 



புதிய அலாய் வீல்கள், ஆட்டோ 4 கார்னர் லெவலிங் சிஸ்டம், பவர் டோர் போன்ற பல்வேறு சிறப்பம்ச ங்களுடன் மாறுதல்கள் செய்யப் பட்டு இருக்கி ன்றன.

09. ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம் கவச மாடல் (Rolls Royce Phantom armored edition )

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் விஆர்7 பாதுகாப்பு தர நிர்ணயங் களுக்கு இணையான அம்சங்கள் இடம் பெற்றிருக் கின்றன. குண்டு துளைக்காத கண்ணா டிகள், 


வலிமையான பாடி பேனல்கள், ரன் ஃப்ளாட் டயர்கள் என பல்வேறு சிறப்பம்ச ங்களை கொணடது. 10 அடி தூரத்திலிருந்து ஏகே-47 துப்பாக் கியால் சுட்டாலும், பாதிப்பு ஏற்படாது. விலை விபரம் வெளியிடப் படவில்லை.

10 . புரொஜெக்ட் கான் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் (Project Kahn Rolls-Royce Phantom)

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கார் கஸ்டமைஸ் நிறுவன மான கான் டிசைன்ஸ் நிறுவ னத்தில் உருவான மாடல். 


பியர்ல் ஒயிட் என்ற வெள்ளை வண்ணத்தில் கிளாசி ப்ளாக் என்ற பிரத்யேக கருப்பு நிற க்ரில் கொடுக்க ப்பட்டு மிகவும் சிறப்பாக மாற்ற ப்பட்டு இருக்கிறது. 
22 இன்ச் சில்வர் வண்ண அலாய் வீல்களும் காருக்கு சிறப்பு சேர்க்கிறது. விலை மதிப்பு வெளியிடப் படவில்லை.
Tags:
Privacy and cookie settings