ஏழு விஷயம் பொய்யின்னா உங்க வாழ்க்கை கஷ்டம் தான் !

காதலில் பொய் கூறாமல் இருக்க முடியாது. எங்கேனும் வெளியில் கிளம்ப வேண்டும் என்றால் கூட மணிக்கணக்காக கிளம்பிவிட்டேன் என்று பொய் கூறுவதில் இருந்து, நண்பர்களுடன் சுற்றுவது வரையிலும் பல பொய்களை ஆண்கள் கூறுவதுண்டு.

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கூட பொய் கூறுவது உண்டு. ஆனால், குறிப்பிட்ட ஏழு பொய்கள் கூறுவது ஒருவேளை பெண்கள் கண்டுபிடித்து விட்டால் உங்கள் உறவு மட்டுமின்றி, உங்கள் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் மதிப்பும் கூட வெகுவாக பாதிக்கப்படும்.

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

நான் இதுவரை காதலித்ததே இல்லை. நீ என் முதல் காதல். எனக்கு அத்தை பெண்கள் கூட கிடையாது தெரியுமா என ஓவர் பீலாய் வேண்டாம். மற்றும் ஒரே நேரத்தில் இரு பெண்களிடம் நெருக்கம் காட்டுவதை தவிர்த்து விடுங்கள். 

ஏனெனில், சில சமயங்களில் பெண்கள் உங்களை மிகவும் நம்பிய பிறகு நீங்கள் ஏமாற்றியது தெரிந்தால், பக்க விளைவுகள் மிக பெரிதாய் இருக்கும்.

காசு, பணம்

காசு, பணத்தை எதிர்பார்த்து தான் ஒரு பெண் உங்களிடம் பழகுகிறார் என்பதை முதல் சந்திப்பிலேயே தெரிந்துக் கொள்ள முடியும். எனவே, உங்களை உண்மையாக காதலிக்கும் பெண்ணிடம், 

சம்பளம், சேமிப்பு போன்றவற்றை பற்றி பொய் கூற வேண்டாம். உண்மை அறியும் போது உறவே முற்றிலுமாக அறுபடும் வாய்ப்புகள் இருக்கின்றன.

பரம்பரை வரலாறு

இப்போதெல்லாம் 80% யாரும் குடும்ப பின்னணியை பார்த்து காதலிப்பது இல்லை. எனவே, என் குடும்பம், அந்தஸ்து, பெயர், புகழ் என பொய்கள் கூற வேண்டாம். குடும்பத்தை பற்றி பொய் கூறுவது. நீங்கள் குணாதிசயங்கள் மீது சந்தேகம் கொள்ள வைக்கும்.

நான் எல்லா யாரு தெரியுமா

பெரும்பாலும் ஆண்கள் கூறும் பொய். நான் எல்லாம் என் ஏரியாவிலேயே கெத்து, மினிஸ்டர் வண்டி கூட நாங்க வந்த ஓரம்கட்டி தான் நிற்கும் என்பது போல உலகமகா நடிப்பை காதலியிடம் காட்ட வேண்டாம்.

லொக்கு, லொக்கு

உங்கள் உடல் நலனில் ஏதேனும் கோளாறு இருந்தால் முதலே கூறி விடுங்கள். முக்கியமாக பால்வினை நோய்கள் குறித்து பொய் கூற வேண்டாம், இது உங்களது அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.

குதிரை பாய்ச்சல்

உடலுறவில் சார்ந்து உங்களை மேலோங்கி காட்டிக்கொள்ள வேண்டாம். இது பெண்கள் மத்தியில் உங்களது பிம்பத்தை தவறாக முறையில் உண்டாக்கிவிடும்.


எல்லாமே….

சிலர் தொட்டதற்கு எல்லாம் பொய் கூறுவார்கள் கேட்டால், காதலி கோபித்துக் கொள்வாள் என்று பொய் கூறுவார்கள்.

இப்படி பொய்கள் அதிகரித்துக் கொண்டே போவது உங்கள் உறவை மட்டுமின்றி உங்கள் மீது மற்றவர் வைத்திருக்கும் நம்பிக்கை, மதிப்பு போன்றவையும் கூட நாசமாக்கிவிடும்.
Tags:
Privacy and cookie settings