தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என தொடர் வெற்றிகளை கொடுத்து நம்பர் 1 இடத்திற்கு வந்து விட்டார் நயன்தாரா.
இந்நிலையில் நயன் தாராவையும், பீர் பாட்டுலும் என்று ஒரு படமே எடுத்து விடலாம் போல. யாரடி நீ மோகினி படத்தில் இவர் மது அருந்துவது போல் ஒரு காட்சி வரும்,
அந்த படம் தாறுமாறு ஹிட், அதை தொடர்ந்து ராஜா ராணி படத்தில் கையில் பீருடன் வருவார். நானும் ரவுடி தான் படத்தில் பீர் வாங்க கடைக்குச் செல்வார்.
தற்போது திருநாள் படத்தில் பீர் பாட்டிலுடன் ஹீரோவிடம் பேசுவது போல் ஒரு காட்சி. முந்தைய படங்களின் ஹிட் செண்டிமெண்ட் தான் இவரை இப்படி செய்ய வைக்கின்றது என பலரும் கூறி வருகின்றனர்.
இருப்பினும் இது தேவை தானா? என சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல் ஒரு சில சமூக ஆர்வாலர்கள் கருத்து போரை தொடங்கி விட்டனர்.
பற்றாக் குறைக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சேர்ந்து எடுத்தப் படியான புகைப்படங்களும் சமூக வலை தளங்களில் பரவிக் கொண்டிருகிறது.
Tags:

