தென் அமெரிக்க நாடுகளில், கொசுக்கள் மூலம் பரவி வரும் சிகா வைரஸ் நோய், பாலுறவு மூலமும் பரவுகிறது என்று விஞ் ஞானிகள் அதிர்ச்சித் தகவல்கள் வெளியி ட்டுள்ளனர்.
செக்ஸ் மூலமும் பரவும் சிகா நோய் !
சிகா வைரஸ் நோயால், கர்ப்பத்தில் வளரும் குழந்தை களின் மூளை வளர்ச்சி பாதிப் படைந்து, பிறக்கும் குழந்தைகள் சிறிய தலை களுடன் பிறக்க நேர்கின்றன என்பதால்,

வரும் 2018-ம் ஆண்டு வரை தென் அமெரிக்க நாடுகளில் பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டிருந்தது.

இந்நிலை யில்,எய்ட்ஸ் நோய் போலவே, பாலுறவு மூலமும் சிகா வைரஸ் தொற்று ஏற்படுவதாக விஞ்ஞானி கள் பகீர் தகவல்களை வெளியிட் டுள்ளனர். 

44 வயது ஆண் ஒருவரின் விந்தணுவிலும், சிறுநீரிலும் சிகா வைரஸ் இருந்தது கடந்த 2013-ம் ஆண்டி லேயே கண்டறியப்பட்டது. 

ஆனால், அப்போது அவரது ரத்தத்தில் அந்த வைரஸ் கிருமி இல்லை. இதை பிரான்ஸ் விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்தார். 
அக்கிருமி அவரது உடலில் எவ்வளவு காலம் இருந்தது என்பதை சரியாக கணக்கிட முடிய வில்லை.

எனவே இந்த வைரஸ் ‘செக்ஸ்’ மூலமும் பரவ வாய்ப்பு உள்ளது என்றும் விஞ்ஞா னிகள் எச்சரித்து ள்ளனர். 

சிகா என்ற இந்த வைரஸ் கிருமி, கடந்த 2008-ம் ஆண்டி லேயே உருவாகி இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.