மறைந்த முப்தி முகமது சயீத் குடும்பத்தாருக்கு சோனியா காந்தி ஆறுதல் !

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறைந்த காஷ்மீர் முதல் மந்திரி முப்தி முகமது சயீத்தின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மறைந்த முப்தி முகமது சயீத் குடும்பத்தாருக்கு சோனியா காந்தி ஆறுதல் !
காஷ்மீர் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்த முப்தி முகமது சயீத் உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு இருந்தார். 

எனினும் சிகிச்சை பலனின்றி, அவர் கடந்த 7–ந்தேதி மரணம் அடைந்தார். 

இதையடுத்து அவருடைய உடல் காஷ்மீர் கொண்டு செல்லப்பட்டு அனந்த்நாக் மாவட்டத்தின் உள்ள சயீத்தின் சொந்த ஊரான பிஜ்பேகரா கிராமத்தில் அடக்கம் செய்யப் பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சயீத்தின் குடும்பத்தி னருக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக இன்று காஷ்மீர் சென்றார்.

அப்போது சயீத்தின் மகளும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலை வருமான மெகபூபா முப்தி மற்றும், சயீத்தின் மனைவி இரு வரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மறைந்த முப்தி முகமது சயீத் குடும்பத்தாருக்கு சோனியா காந்தி ஆறுதல் !
சயீத், 1999–ம் ஆண்டு மக்கள் ஜனநாயக கட்சியை தொடங்குவதற்கு முன்பு வரை காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார்.

காங்கிரசில் அவர் 40 ஆண்டுகள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சயீத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் குலாம் நபி ஆசாத் உடனிருந்தார்.
Tags:
Privacy and cookie settings