குழந்தையில்லாக் குறை.. ஆண்களே அதிக பட்ச காரணம் !

கல்யாணமாகி நாலு வருஷமாச்சு!.. உனக்குத் தான் ஒரு குழந்தை யைப் பெத்து தர துப்பி ல்லையே... என் மகனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண லாம்னு இருக்கோம்!’’
 

என்று இன்னமும் கூட பல குடும்ப ங்களில் பெண்ணைப் பார்த்து தான் முதல் ஈட்டி பாய்ச்சப் படுகிறது! குழந்தை இல்லை என்றால் உடனே பெண்கள் தான் அதற்குக் காரணம் என்ற போக்கு, படிக்காத பாமரர்கள் மத்தியில் தான் என்றில்லை...

படித்தவர்கள் மத்தியில் கூட இந்த எண்ணம் சட்டென்று நீக்க முடியாத அளவில் ஆழப் பதிந்து போயிரு க்கிறது.

இருவரில் யார் வேண்டு  மானாலும் இந்தக் குறைக்குக் காரண மாக இருக்க முடியும் என்ற விஷயமே இரண்டாவது சிந்தனையா கத்தான் ஏற்படுகிறது. அதுவும்கூட ஓரளவு படித்த, விஷய ங்கள் புரிந்த சிலருக்குத் தான். 

குழந்தைப் பேறு வாய்க்கப் பெறாதத தற்கு காரணமான பிரச்னைகள் ஆண்களு க்கும் பெண்களு க்கும் பாதிக்குப் பாதி என்று ஏற்கெனவே மருத்துவ உலகம் சொல் லிக் கொண்டி ருந்தது.

சமீபகால ங்களில் இந்த சதவிகிதம் ஆண்களு க்கு பெண்களை விட கிட்டத் தட்ட பத்து சதவிகிதம் அதிகமாகி இருப்ப தாகத் தனது மருத்துவ அனுபவங் களின் மூலம் தெரிவிக்கிறார் டாக்டர் வி.ஜமுனா. ‘‘உண்மை தான்.

இந்தப் பிரச்னை இப்போ தல்ல.. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டு களாகவே மிக அதிகரித்து வருகிறது.

காரணம் மாறி வரும் நமது வாழ்க்கை முறை தான்!’’ என்கிறார் அவர். இதெல்லாம் ஆண்கள் பிரச்னை’ என்று வெளியே சில பிரச்னைகள் தெரியாத தற்குக் காரணமே சில பெண்கள் தான்.

குறை தங்கள் கணவரிடம் இருக்கிறது என்பதையே வெளிப் படுத்த அவர்கள் தயங்குகி றார்கள் என்பது இவரது கருத்து ‘கணவருக்கு குறையி ருந்தால் கூட எங்க குடும்பத்தில் வேற யாருக்கும் இது தெரிய வேண்டாம்’ என்று பெண்க ளே நினைக் கிறார்கள்.

கணவர்கள் இந்த விஷய த்தில் கஷ்டப்படக் கூடாதென்று மனை விகள் இரட் டைக் கஷ்டப் படுவதைப் பார்க்கும் போது ஆச்சர்ய மாகவும் வேதனை யாகவும் இருக்கிறது’’ என்று சொல்கிறார் இவர். 

ஊசிகளோ, ரத்தமோ இல்லாத இவரு டைய சித்த மருத்துவ சிகிச்சை யினால் இது வரை பிறந்த குழந்தை கள் கிட்டத் தட்ட மூவாயிரத்து எண்ணூறு பேர்.

தமிழகத் தில் மட்டு மல்ல... பாகிஸ்தான், ஈராக், மலேசியா, சிங்கப்பூர், என்று உலகம் முழுக்க இந்தக் குழந்தைகள் இருக்கி றார்களாம்.

இத்தனை குழந்தைக ளின் பெற்றோ ருக்கும் இவர் கொடுத்த சிகிச்சையில் கண்டறிந்த முடிவு தான் மேலே சொன்னது.

அது சரி... குழந்தை யின்மைக் கான ஆண்களின் குறை ஏன் அதிகமாகிக் கொண்டு போகிறது? முதலில் ஆண்களுக்கு என்னென்ன குறை களால் குழந்தைப் பேறு கிடைப்ப தில்லை என்ற அடிப்படை விஷய த்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அப்போது தான் நம் லைஃப் ஸ்டைலில் நாம் புதிதாக கடைப் பிடிக்கும் விஷய ங்கள் ஆண்களுக்கு எந்தக் குறையை அதிகமாக் குகின்றன என்று புரிந்து கொள்ள முடியும்’’ .

பொதுவாகவே ஆண்களுக்கு இருக்கக்கூடிய குறை என்பது உயிரணு க்கள் எண்ணி க்கைக் குறைவு தான். ஒரு ஆணுக்கு உயிரணு க்களின் எண்ணிக்கை மொத்தமாக ஐம்பது மில்லியன் இருக்க வேண்டும்.

இதில் துடிப்போடு இருக்கும் உயிரணுக்கள், இந்த எண்ணி க்கையில் எழுபது சதவிகி தமாவது இருக்க வேண்டும்.

அப்போது தான் ஒரு ஆணால் ஒரு பெண்ணுக்கு குழந்தை தர முடியும்! சில ஆண்க ளுக்கு விந்துத் திரவமே உற்பத்தி ஆகாமல் இருக்கக் கூடும்.

இந்நிலையை ஆஸ்பெர்மியா (Aspermia) என்று அழைக்கி றோம். அது எப்படி ஒரு ஆணுக்கு வயதுக்கு வந்த பின்னரும் அதாவது டீன்ஏஜ் நிலை கடந்த பின்ன ரும் விந்துத் திரவம் உற்பத்தி ஆகாமலே போகும் என்று நீங்கள் சந்தேகம் கேட்கலாம்.
 

நியாயமான சந்தேகம் தான். குழந்தைப் பருவத்தி லேயே புட்டா லம்மை, பொன் னுக்கு வீங்கி, ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் தாக்கிய வர்களுக்கு விதைக ள் செயலற்றுப் போய் விந்துத் திரவத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போகும்.

இன்னும் சிலருக்கு விந்துத் திரவம் உற்பத்தி யாகும்... ஆனால் விந்துத் திரவத் தில் உயிரணு ஒன்று கூட இல்லாமல் இருக்கும். இப்படி உயிரணு அறவே இல்லாமல் பூஜ்யமாக இருந்தால் அந்தக் குறை பாட்டுக்கு அஜுஸ் பெர்மியா என்று பெயர்.

(Azoospermia) இன்னும் சிலருக்கோ விந்துத் திரவத்தில் உயிர ணுக்கள் இருக்கும். ஆனால் அவை வெகு சொற்ப எண்ணி க்கையில் இருக்கும்.

இந்த எண்ணிக் கையைக் கொண்டு ஒரு பெண்ணை கருத் தரிக்கச் செய்ய முடியாது. இந்நிலை க்கு ‘யெலிகூஸ் பெர்மியா’ (Eligoospermia) என்று பெயர்.

யாருக்காவது விந்தில் உயிரணு க்களின் எண்ணிக்கை தேவை யான அளவுக் கும் குறைவாக இருந்து, அவை நீந்துகின்ற தன்மை யையும் குறைவாகக் கொண்டு இருந்தால் அதை ‘ஒலிகோஸ் பெர்மியா’ (Oligospermia) என்று கூறலாம்.

விந்தில் உயிரணு க்களின் எண்ணிக்கை ஓரளவே குறைவாக இருந்தால் அது ‘மைல்டு ஒல்கோஸ் பெர்மியா.’

அதே போல விந்தில் உயிரணு க்களும், செத்துப் போன அணுக் களும் சமநிலையில் இருக்கும் நிலையை ‘மிடில் ஒலிகோஸ் பெர்மியா’ என்போம்.

 விந்துத் திரவத்தில் உயிரணு க்கள் மிகக் குறைவாக இருந்து, இறந்து போன அணுக்களே அதிகம் இருந்தால் அது, ‘சிவியர் ஒலிகோஸ் பெர்மியா’ எனப்படும்.

ஒரு சிலருக்கு விந்தில் உயிர ணுக்களின் எண்ணி க்கை விரல்விட்டே எண்ணு கிற அளவுக்கு இருந்து, பிற அனைத்துமே செத்துப் போன அணுக் களாக இருக்கும்.

 

அந்நிலையை ‘வெரி சிவியர் ஒலிகோஸ் பெர்மியா’ என்கிறோம். சிலருக்கு விந்தில் தேவை யான அளவுக்கு உயிரணு க்கள் இருக்கும். ஆனால் அவை நீந்துகிறத் தன்மை மிகக் குறைவாக இருக்கும்.

(கரு உருவாக நீந்தும் தன்மை முக்கியம்) இது ‘ஆஸ்தெனோஸ் பெர்மியா’ (Asthenospermia). விந்துத் திரவத்தில் சீழ் அல்லது ரத்தத்தின் வெள்ளை அணுக்க ளும் கலந்து இருந்தால் 

அது ‘பயோஸ் பெர்மியா’ (pyospermia) உயிரணு க்களின் தலைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒட்டிக் கொண்டிரு ந்தால் அது ‘யூடூஸ் பெர்மியா.’ உயிரணு க்கள் படிகங்கள் போலக் காணப் படுகிற நிலை இருந்தால் அது ‘கிரிஸ்டோல ஸ்பெர்மியா’ (Crystolospermia).

உயிரணு க்களை வளமாகச் செய்ய வேண்டிய மாவுச்சத்து (கார்போ ஹைட்ரேட்), வைட்டமின்_ஈ போன்றவை குறைவாக இருந்தால் அது ‘யெனிலோஸ் பெர்மியா’ (Anylospermia).

முறையற்ற செக்ஸ் உறவின் காரணமாக ஆணுக்கு கொனோரியா எனும் பால்வினை நோய் வந்திருந்து உயிரணுக்கள் கருத்த ரிக்கச் செய்ய இயலாத நிலையில் இருந்தால் அது ‘ஹீமோஸ் பெர்மியா’ (Haemoespermia).

விந்தில் உள்ள உயிரணு க்கள் அனை த்துமே இறந்த அணு க்களாக இருந்தால் அந்நிலை ‘நெக்ரோஸ் பெர்மியா’ (Necrozopermia) எனப்படும்.

மேலே குறிப்பிட்ட வற்றில் ஆண்களிடம் அதிகமாக இருக்கும் குறை ‘ஒலி கோஸ்மியா’ என்ற நிலைதான்.

ஒருவேளை உயிரணு க்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக டெஸ்டுகள் சொன்னா லும்கூட அதன் வீரியம் அதாவது நீந்தும் தன்மையைப் பொறுத்து தான் குழந்தை உருவாகிறது.

உயிரணுக் களின் வீரியத்தை வைத்து, அசையாத தன்மை யுள்ள உயிரணு க்கள், வால் மட்டும் அசைக்கும் உயிரணுக்கள், வேகமற்ற உயிர ணுக்கள், வேகமான உயிரணு க்கள் என்று நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

இந்த நான்கிலும் முதல் இரண்டு வகை கொண்ட வர்களால் தன் மனைவி க்குச் குழந்தை தர முடியாது (சிகிச்சைக்கு பின்பே முடியும்).

மூன்றாவது வகை சிறிது கஷ்டம். நான்காவது வகை தான் தொட்டதும் பற்றிக் கொள்ளும்!’’ என்று தெளிவுப்ப டுத்துகிறார் டாக்டர் ஜமுனா.

சமீபகாலமாக ஆண்களின் குறை அதிகமா வதற்கு என்ன காரணம் என்றும் சொன்னார் அவர்: ‘இப்போ தெல்லாம் பான், ஜர்தா போடும் இளை ஞர்களின் எண்ணி க்கை அதிகமாகி விட்டது.

சிகரெட்டும் சரி, பான் போடுபவ ர்களும் சரி... புற்று நோய் போன்ற உடல்நலக் கேட்டுக்கு மட்டு மல்ல... ஆண் குறைகளுக்கும் ஆளா கிறார்கள். இதனால் உயிரணு க்கள் உற்பத்தியே இருபத்தி மூன்று சதவிகிதம் குறைகிறது.

உயிரணுவின் வீரியம் (நீந்துகிற தன்மை) பதின்மூன்று சதவிகிதம் குறைகிறது. ஏன். சில சமயம் உயிரணு க்களின் வடிவம் கூட சிதைந்து போவதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

அதே போல இன்று ஆண்கள் மதுபானம் அருந்தும் எண்ணி க்கையும் மிக அதிகமா கிவிட்டது. மதுபானங்கள் உயிரணுக்கள் உற்பத்தி யிலேயே சிக்கல் ஏற்படுத்தி விடுகின்றன தெரியுமா? 

ஆண்களின் குறைக்கு மிக முக்கிய மான இன்னொரு காரணம் தொலைந்து போய் விட்ட நம் ‘மாரல்!’

அதாவது ‘இது ஒன்றும் பெரிய தப்பில்லை’ என்ற ரீதியில் ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகும் இடங்க ளில் ஏற்படும் செக்ஸ் ரீதியிலான அட்ஜெஸ்ட் மெண்டுகள் கூட உயிரணு க்களை முக்கியமாக பாதிக்கின்றன.

 

சமீப காலமாக சில பெண்கள் தாம்பத்தி யத்தின் போது தங்கள் பிரத்தியேக பகுதிகளில் வழவழப்பு ஏற்படுத்த வேண்டி கே.ஒய். ஜெல்லி, சர்க்கிலூப், லுபிபே கஸ் போன்ற ஜெல்லிகளை சகஜமாக உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இன்னும் குழந்தை பெறாத பெண்கள் இவற்றை உபயோகிக்க வேண்டாம். காரணம், இது போன்ற ஜெல்லிகளுக்கு ஆண்களின் உயிரணு க்களை கொன்று விடுகிற ஆற்றல் உண்டு.

பொதுவாகவே தாம்பத்தி யத்துக்கு முன்பு மனைவியை போர்பிளே எனப்படும் காதல் சில்மிஷ ங்கள் மூலம் உணர்வு மயமான சூழ்நிலை க்கு அழைத்துச் சென்றாலே போதும்...

பிரத்தியேக பகுதிகள் நெகிழ்வுறும். அதனால் ஜெல்லி வேண்டாம். ஆண்கள், கட்டுமஸ்தான உடம்புக்காக அதிக எக்ஸ ர்ஸைஸ்... குறிப்பாக ‘சைக்கிளிங்’ செய்வதும் கூட இந்த விஷயத்தில் தப்புதான் தெரியுமா?

(அளவான உடற்பயிற்சி எப்போதும் ஆபத் தில்லை) வாரத்துக்கு நூறு மைல் தொலைவு ஓடுவது, ஐம்பது மைல் தொலைவு சைக்கிள் ஓட்டுவது,

மிக அதிக தூரம் டூவிலரில் உட்கார்ந் தபடியே போவது போன்றவை கூட உயிரணு உற்பத்தியில் பிரச்னை களை ஏற்படுத்தி விடும்.

அதிக உஷ்ண மான சூழலில் வெகு நேரம் நிற்பது, அலுவல கத்தில் உஷ்ணமா ன இடத்தில் சேர்போட்டு அமர்வது அல்லது வெப்பம் கொப்ப ளிக்கும் மிஷின்க ள் ஓடுமிடம், பாய்லர் போன்ற வற்றின் அருகே மணிக் கணக்கில் நிற்பது,

உணவு அல்லது தினசரி பழக்க வழக்க ங்களால் உடலை அதிக சூடுக்கு உட்படு த்திக் கொள்வது போன்ற வற்றை பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

அதிக வெந்நீரில் குளிப்பதை க்கூட தவிர்க்கலாம். கடைசியாக ஒரு மிக முக்கிய மான விஷயம்..

தேவையி ல்லாமல் அடிக்கடி செயற்கை குளிர்பானங்கள், பிரிசர் வேடிவ் கலந்த உணவு வகைகள், பாஸ்ட் பூட்கள் போன்ற வற்றைச் சாப்பிடு வதைக் தவிருங்கள்.

நல்ல சத்தான உணவை நேரத்துக்குச் சாப் பிடுவதை வழக்க மாக்கிக் கொண்டாலே இந்த ரசாயன உணவு வகைகள் சாப்பிடுவது குறையும்.

இவைகூட ஆண்களு க்கான மலட்டுத் தன்மையை உருவா க்கலாம்!’’ என்று சொல்கிறார்.. டாக்டர் ஜமுனா.
Tags: