புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருள் வழங்கும் பணி !

புதுச்சேரி, காரைக்கால், மாஹே பகுதியைச் சேர்ந்த 3,16,113 குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி உட்பட 9 பொங்கல் பொருட்கள் வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். 
புதுச்சேரியில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ஜனவரி 5-ம் தேதி முதல் ரூ. 280 மதிப்புடைய பொங்கல் பரிசு பொருட்கள் தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். 

அதில் பச்சைஅரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, தலா அரை கிலோ துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெல்லம், பச்சைபயறு ஆகியவை தரப்படும். 

இதற்கு ரூ. 9.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச பரிசை பொதுமக்கள் அந்தந்த ரேஷன் கடையில் பெறலாம். இதனால் அரசுக்கு, ஒரு குடும்பத்திற்கு 306.48ரூபாய் என ரூ.9 கோடியே 68 லட்சம் செலவு ஏற்படும் எனக் கூறியிருந்தார். 

அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
Tags:
Privacy and cookie settings