டீசல் கார்களுக்கு தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு !

கார் உற்பத்தியாளர்களான டொயோடா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் மெர்சிடெஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் டெல்லியில் டீசல் கார்களை முன்பதிவு செய்வதற்கு விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். 
டெல்லியில் அதிகரித்துவரும் காற்று மாசைக் குறைக்கும் வகையில் 2000 சிசி திறனுக்கு மேம்பட்ட டீசல் கார்களை இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை முன்பதிவு செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

இத்தகைய தடையை விலக்கக் கோரி இம்மூன்று நிறுவனங்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க் கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதின்றம் அறிவித்துள்ளது. 

கடந்த டிசம்பர் 16-ம் தேதி டெல்லி மற்றும் என்சிஆர் பிராந் தியத்தில் 2000 சிசி திறனுக்கு மேற்பட்ட டீசல் கார்களை முன்பதிவு செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

நீதிமன்றத்தின் உத்தரவை மதிப்பதாகவும், இது டெல்லியின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க உதவும் என்று நம்புவதாக மஹிந் திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியின் காற்று மாசைக் குறைக்க உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித் துள்ளது. 

இதன்படி 2005-க்கு முன் பதிவு செய்யப்பட்ட கனரக வாகனங்கள் டெல்லியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தலை நகரில் ஓடும் டாக்சிகள் அனைத்தும் 2016 மார்ச் மாதத் துக்குள் சிஎன்ஜி-யில் செயல்படக் கூடியதாக மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

இது தவிர டெல்லி அரசு தனியார் வாகனங்கள் ஒற்றை இலக்கங்கள் மட்டும் ஒரு நாளும் இரட்டை இலக்க எண்கள் மற்றொரு நாளும் இயக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

இதன் மூலம் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க முயற்சி எடுத்துள்ளது
Tags:
Privacy and cookie settings