ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் சாமி தரிசனம் !

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றதையொட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அனுமன் ஜெயந்தி விழா

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் பாலக்கரை காமராஜ் நகர் அருகே உள்ள ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

இதையொட்டி உலக நன்மைக்காக கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேய மூல மந்திரம், மாலா மந்திரம், காயத்ரி மந்திரம் மற்றும் ஹோமம் ஆகியவை நடைபெற்றன. 

மேலும் ஆஞ்சநேயருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு வடமாலை மற்றும் சகஸ்ரநாம, திரிசதி அர்ச்சனை போன்றவை நடைபெற்றன.

இதேபோல கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அனுக்கிரக ஆஞ்சநேயர் கோவில், பெரிய கடைத்தெருவில் உள்ள அனுமார் கோவில், புளியம்பேட்டை விஜயலட்சுமி நகரில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், 

சகாஜி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், புதுப்பாலம் அருகே உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் மற்றும் வேத ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:
Privacy and cookie settings