முறையற்ற தூக்கம் இதய நோய்க்கு வழிவகுக்கும் !

தூக்கத்துக்கும் இதய நோய்க்கும் சம்பந்தம் உண்டா? என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
முறையற்ற தூக்கம்


இந்திய வம்சாவளி விஞ்ஞானியான அனூப்சங்கர் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. 30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இதய நோய்க்கும், தூக்கத்து க்கும் சம்பந்தம் உண்டு என்று கண்டு பிடிக்கப் பட்டது.

ஒருவர் 7 மணி நேரத்துக்கு குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ தூங்கினால் அவரை இதய நோய் தாக்கும் என்று மருத்துவ ஆய்வு தகவல் கூறியுள்ளது:-

7 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கினால் அவர்களுக்கு அதிக அளவில் இதய பாதிப்பு ஏற்படும். 9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் 7 மணி நேரம் தூங்குவதை விட 1 1/2 மடங்கு இதய நோய் பாதிப்பு ஏற்படும்.
Tags:
Privacy and cookie settings