மும்பை நடிகை ராணி முகர்ஜிக்கு பெண் குழந்தை பிறந்தது !

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பாலிவுட் நடிகையான ராணி முகர்ஜிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் கிட்டத்தட்ட எல்லா பாலிவுட் ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் தமிழில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஹேராம் படத்தில் நடித்துள்ளார். இவர் பாலிவுட்டின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ராவை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ராணி முகர்ஜி பிரசவத்திற்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அதிரா எனப் பெயர் சூட்டப்பட்டது. 

இந்த தகவல் வெளியானதும், பாலிவுட் சினிமா காரர்கள் ராணிமுகர்ஜிக்கும், அவரது கணவர் அதித்யா சோராவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings