பாகுபலி படத்துக்குப் பிறகு அதிகம் பேசப்பட்ட படமென்றால் அது தனி ஒருவன் மட்டுமே. படத்தின் கதை, ஜெயம் ரவியின் நடிப்பு, நயன்தாராவின் எதார்த்த நடிப்பு,
ஆதியின் இசை எல்லாவற்றிற்கும் மேல் அரவிந்த சாமி என்ற ஒற்றை வார்த்தை எனலாம். ஒரு வில்லன் பாத்திரத்தை மிக நுணுக்கமாக , வித்தியாசமாகக் காண்பித்த படம்.
மேலும் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் அரவிந்த்சாமி எனலாம். இணையத்தைக் கலக்கிய இந்த தனி ஒருவன் ஹீரோஸ் ஜோடி மீண்டும் இணையலாம் எனக் கூறப்படுகிறது.
ரோமியோ ஜூலியட் படத்தின் இயக்குநர் பட இயக்குநர் லக்ஷ்மன் சமீபத்தில் ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலுக்கு பாபி சிம்ஹா,விஜய்சேதுபதி பரீசிலனையில் இருக்க தற்போது அந்தக் கேரக்டருக்கு அரவிந்த்சாமி தேர்வாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும் பொறுத்திருந்து பார்க்கலாம். இந்தப்படத்தை தயாரிக்க இருக்கிறார் பிரபுதேவா.