கோடி, கோடியாய் சம்பாதிக்கும் டாப் 10 மாடல் அழகிகள் !

மவுசு குறையாத கிஸ்ஸெலே பின்ட்சென் : பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்த அழகியின் கடந்த ஆண்டு மாடல் வருமானம் 45 மில்லியன் டாலர்கள். 
கோடி, கோடியாய் சம்பாதிக்கும் டாப் 10 மாடல் அழகிகள் !
31 வயதான இந்த அழகிக்கு ஹாலிவுட் நடிகர் லியர்னார்டோ டிகாப்ரியோ உடன் காதல் பயங்கர ஹாட்டாக இருந்தது.

பின்னர் கால்பந்து வீரர் டாம் பிராடியை திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொண்ட பின்னரும் மாடல் அம்மணிக்கு மவுசு குறையவில்லை.

தங்க உருவச்சிலை அழகி கேட் மோஸ்

ஒல்லி இடுப்போடு ஒடிந்து விழுந்து விடுவதைப்போல இருந்தாலும் கடந்த ஆண்டு கேட் மோஸ் சம்பாதித்த தொகை 9.2 மில்லியன் டாலர்கள். கடந்த 2008 ம் ஆண்டு பிரிட்டிஸ் மியூசியத்தில்  
கோடி, கோடியாய் சம்பாதிக்கும் டாப் 10 மாடல் அழகிகள் !
இந்த ஒல்லிக்குச்சி உடம்புக்காரியின் 100 சதவிகிதம் தங்கத்தால் செய்யப்பட்ட உருவச்சிலை திறந்து வைக்கப் பட்டுள்ளது. 

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி பல முக்கிய ஒப்பந்தகளை இழந்தார் என்றாலும் சம்பாத்தியத்திற்கு குறைவில்லை.
பூங்கா நாயகி நடாலியா வோடியானோவா

ரஷ்யாவில் பிறந்த இந்த அழகி வசிப்பது இங்கிலாந்தில் தான். இவர் கடந்த ஆண்டில் சம்பாதித்த தொகை 8.6 மில்லியன் டாலர்கள். 
கோடி, கோடியாய் சம்பாதிக்கும் டாப் 10 மாடல் அழகிகள் !
பிறந்த நாட்டின் அதிகம் பற்றுக் கொண்ட இந்த அழகி தன்னுடைய சொந்த காசில் ரஷ்யாவில் நிறைய பூங்காக்களை கட்டி யிருக்கிறார். 

2014 ம் ஆண்டு நடக்கப் போகும் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளுக்கான தூதுவராக இவரை ரஷ்ய அரசு நியமித்திருக்கிறது.

ஹாட் நியூஸ் ஆட்ரியானா லீமா

செக்ஸ் பற்றி பேசி ஹாட் நியூசில் இடம் பிடித்த இந்த மாடல் கடந்த வருடத்தில் சம்பாதித்த தொகை 7.3 மில்லியன் டாலர்கள். தோழிக்கு துணையாக சூட்டிங் சென்றவர் தானும் மாடலானார்.
கோடி, கோடியாய் சம்பாதிக்கும் டாப் 10 மாடல் அழகிகள் !
திருமணத்திற்கு பிறகான செக்ஸ்தான் முழுமையானது என்று கூறிய இந்த அழகி செர்பிய விளையாட்டு வீரரை கரம் பிடித்துள்ளார்.

தோள் பட்டைகள் வலுப்பெற லோலாசனம் | Lolasanam !

மெழுகுச்சிலை அழகி டாட்சன் குரோஸ்

சமூக சேவை மனப்பான்மை கொண்ட இந்த அழகி டான்ஸ் 4 லைஃப் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 
கோடி, கோடியாய் சம்பாதிக்கும் டாப் 10 மாடல் அழகிகள் !
இதன் மூலம் எச்.ஐ.வி விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகிறார். இவரது கடந்த ஆண்டு மாடலிங் வருமானம் 6.9 மில்லியன் டாலர்கள்.

டச்சு மொழியில் வெளியான முதல் 3டி படத்தில் இவர் தான் ஹீரோயின். நெதர்லாந்தை தாயகமாக கொண்ட டாட்சனுக்கு ஆம்ஸ்டர்டாம் டுசாட் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது.

அலர்ஜி அலெக்சான்ட்ரா அம்ப்ரோசியா

பிளாஸ்டிக் சர்ஜரி என்றாலே இந்த அழகிக்கு அலர்ஜியாம். இதற்குக் காரணம் சிறுவயதில் தன்னுடைய பெரிய காதுகளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதில் அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாம்.
கோடி, கோடியாய் சம்பாதிக்கும் டாப் 10 மாடல் அழகிகள் !
இதன் காரணமாகவே இப்பொழுது பிளாஸ்டிக் சர்ஜரி பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. 

இந்த மாடல் அழகியின் கடந்த ஆண்டு வருமானம் 6.6 மில்லியன் டாலர்கள். இரண்டு குழந்தைகளுக்கு தயான பின்னரும் மாடல் வருமானத்தில் டாப் 10க்குள் இருக்கிறார்.

நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட !

தேங்காய் எண்ணெய் மிரண்டா கெர்

கிரீன் டீயுடன் தேங்காய் கலந்து குடித்து தன் அழகினை பாதுகாத்து வருகிறார் இந்த ஆஸ்திரேலியா அழகி. இவரது கடந்த ஆண்டு வருமானம் 4 மில்லியன் டாலர்கள்.
கோடி, கோடியாய் சம்பாதிக்கும் டாப் 10 மாடல் அழகிகள் !
பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே ‘டாலி’ இதழின் சிறந்த மாடல் பட்டத்தை வென்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

பல் அழகி லாரா ஸ்டோன்

மெர்சிடிஸ் பென்ஸ் கம்பெனிக்கான மாடல்களில் முக்கியமானவர். இவர் கடந்த ஆண்டு சம்பாதித்த தொகை 3.8 மில்லியன் டாலர்கள்.
கோடி, கோடியாய் சம்பாதிக்கும் டாப் 10 மாடல் அழகிகள் !
12 வயதிலேயே மாடலிங் உலகில் நுழைந்த லாராவின் பல் வரிசை வித்தியாசமாக இருக்கும். கடந்த 2009 ம் ஆண்டு போதைப் பழக்கத்தில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெற்றிருக்கிறார்.

யோகா எப்போது செய்ய வேண்டும்? | Yoga!

கலக்கல் கரோலின் மர்ஃபி

வெள்ளை உடையில் தேவதையாகத் தெரியும் இந்த அழகி 15 வது வயதில் மாடல் உலகிற்குள் நுழைந்தார்.
கோடி, கோடியாய் சம்பாதிக்கும் டாப் 10 மாடல் அழகிகள் !
இவரின் கடந்த ஆண்டு வருமானம் 3.5 மில்லியன் டாலர்கள்.

அதிர்ஷ்ட தேவதை கேண்டிஸ் ஸ்வேன் போய்ல்

தென் அப்ரிக்காவில் பிறந்து, மார்க்கெட்டில் சுற்றித் திரிந்த போது அதிர்ஷ்டதேவதை இவரை உரசிப் பார்த்தது.
கோடி, கோடியாய் சம்பாதிக்கும் டாப் 10 மாடல் அழகிகள் !
அதிகம் சம்பாதிக்கும் இளவயது மாடல். கடந்த ஆண்டு இவரின் வருமானம் 3.1 மில்லியன் டாலர்கள்.
Tags: