பூமியின் உட்பகுதியில் நிகழும் மாற்றங்கள்..!

மனிதர்களின் செயற்பாடுகளால் பூமிப்பந்தின் உள்பகுதி உருகத் தொடங்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 பூமியின் உட்பகுதியில் நிகழும் மாற்றங்கள்..!
சுற்றுச்சூழல் பாதிப்பு, ஓசோன் ஓட்டை ஆகிய வற்றால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில் பூமியின் உள்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செபாஸ்டியன் ரோஸ் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தினர். 

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதுமட்டுமின்றி பூமியின் ஆழ்மைய பகுதியும் உருகத்தொடங்கி உள்ளது. 

பூமியின் இயக்கத்துக்கு தேவையான மின்காந்த அலைகள் இப்பகுதியில் இருந்து தான் கிடைக்கிறது. இதன் விட்டம் சுமார் 2,400 அடி. நிலா அளவுக்கு பெரிதானது.

இது மிக மிக கடினமானது. இப்பகுதியை சுற்றி வெளிப்புறம் இரும்பு, நிக்கல், அலாய் உள்ளிட்ட பிசுபிசுப்பான ஒட்டும் தன்மையுள்ள, பிரகாசமான போர்வை போன்ற உலோகக்கலவை திரவ நிலையில் உள்ளது. 
இயல்பு நிலை பாதிக்கப்படாமல் இப்பகுதியில் கன்வெக்ஷன் முறையில் வெப்பம் மற்றும் குளிர்தல் நிகழ்வு மாறிமாறி நடைபெறும். 

சீரான கன்வெக்ஷன் பூமி சுழற்சியை பாதிக்காது. இடர்பாடுகளால் கன்வெக்ஷன் முறையில் ஏற்படும் பாதிப்பு இப்பகுதியில் வெப்பத்தை அதிகரித்து பாதிப்படையச் செய்யும். 
இதனால் அங்கிருந்து வரும் மின்காந்த அலைகள் பாதிக்கப்பட்டு பூமி சுழற்சி உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலமாக மட்டுமே இந்த பாதிப்பை சரி செய்ய முடியும்.
Tags:
Privacy and cookie settings