அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அமெரிக்கா முன்னோடி: ஒபாமா !

வானிலை, பருவநிலை மாற்றம் உட்பட உலகை உலுக்கும் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அமெரிக்கா உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்
ஆர்கனைசிங் ஃபார் ஏக்‌ஷன் நிகழ்ச்சிக்கு வந்த அமெரிக்க அதிபர் ஒபமா. | படம்: ஏ.பி.
Organizing for Action நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, “நாங்கள் வரும் போது நமது அயல்நாட்டுக் கொள்கையில் நமது செல்வாக்கு மங்கியே காணப்பட்டது, ஆனால் இன்று புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அமெரிக்கா முன்னோடியாக திகழ்கிறது. 

ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்யாததை உறுதி செய்தது, 21-ம் நூற்றாண்டுக்கான புதிய, வலுவான, புத்திசாலித் தனமான வாணிப விதிமுறைகளை உறுதி செய்தது என்று அமெரிக்கா முன்னோடியாகத் திகழ்கிறது. 

வானிலை/பருவ நிலை மாற்ற விவகாரத்தில் அமெரிக்கா இன்று உலக நாடுகளை வழிநடத்திச் செல்கிறது.

பூமியின் பெரும்பாலான பகுதிகளை வாழமுடியாத இடமாக மாற்றுவதைத் தடுக்க நாம் உலகிற்கு உதாரணமாகத் திகழ வேண்டும். அப்படி வாழத்தகுந்ததாக நாம் பூமியை மாற்ற வேண்டுமென்றால் இயற்கை எரிவாயுவை அப்படியே நிலத்தில் விட்டு விட வேண்டியதுதான், அதனை எரிப்பது கூடாது.

வானில் அபாயகரமான மாசை வெளியேற்றுவதை நாம் குறைத்தே ஆக வேண்டும். தூய்மையான சுற்றுச்சூழலைத் தக்கவைக்கும் மாற்று எரிசக்திகளை உருவாக்குவதை நாம் உறுதி செய்வோம்.

நான் அதிபராக இருக்கும் வரையில், ஒருங்கிணைக்க நீங்கள் இருக்கும் வரை, உலகை என்ன உயர்ந்த நிலையில் வைக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ முதலில் நாம் அத்தகைய உயர் நிலையை எட்டுவோம்.

வால்ஸ்ட்ரீட்டில் புதிய விதிமுறைகளை உருவாக்க முடியாது, அல்லது நுகர்வோருக்கு மேலும் பாதுகாப்பு வழங்க முடியாது, அல்லது செல்வம் கொழிக்கும் அமெரிக்கர்களீடம் அதிக வரி செலுத்து ஆனால் வேலை வாய்ப்பு வளர்ச்சியைக் குறைக்காதே என்று கோர முடியாது என்றெல்லாம் நம்மிடம் கோரப்பட்டது. 

ஆனால் நாம் இவையெல்லாவற்றையும் செய்து காட்டினோம். பங்குச்சந்தை இரட்டிப்பானது. தனியார் துறை வேலைவாய்ப்பில் ஒரு நீண்ட நெடிய காலக்காட்டத்தை தற்போது பார்த்து வருகிறோம்.

நான் அதிபராக பதவி ஏற்ற போது மருத்துவக் காப்பீடு இல்லாமல் 15%-க்கும் மேலான அமெரிக்கர்கள் இருந்தனர். ஆனால் முதல் முறையாக உங்களால் 90% அமெரிக்கர்கள் மருத்துவ காப்பீட்டின் கீழ் வந்துள்ளனர். 17 மில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் மருத்துவ காப்பீடு பெற்றுள்ளனர்.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு அனுமதி அளித்தால் நாம் நிதித்தட்டுப்பாட்டை அதிகரிப்போம் என்று கூறப்பட்டது, ஆனால் ஒன்று தெரியுமா? 17.6 மில்லியன் மக்களை மருத்துவ காப்பீட்டின் கீழ் கொண்டு வந்துள்ளோம், ஆனால் நிதிப் பற்றாக்குறை மூன்றில் இரண்டு பங்கு குறையவே செய்தது.

இவ்வாறு கூறினார் ஒபாமா. 
Tags:
Privacy and cookie settings