உடன் இருப்பவர்கள் எடுத்துக் கூறியும், தனது 60வது படத்தை பரதன் இயக்குவார் என்று விஜய் எடுத்த தனது முடிவில் இருந்து மாறவில்லை.
'தெறி' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் 60வது படத்தின் இயக்குநராக ஒப்பந்தமானார் பரதன், இயக்குநர் பரதன் ஏற்கனவே 'கில்லி', 'வீரம்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். மேலும், 'அழகிய தமிழ் மகன்' என்ற படத்தையும் விஜய்யை வைத்து இயக்கி இருக்கிறார்.
விஜய்யின் 60வது படத்தின் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா, மோகன் ராஜா, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. ஆனால், பரதன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, பரதனே இயக்கட்டும் என்று முடிவு செய்தார்.
ஆனால், விஜய்யின் இந்த முடிவுக்கு இணையத்தில் விஜய் ரசிகர்கள் மத்தியிலேயே அதிருப்தி தெரிந்தது. பலரும் கண்டிப்பாக பரதனாக இருக்காது என்று கூறிய போது, படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டிருக்கிறார்கள்.
மேலும், விஜய் உடன் இருப்பவர்கள் பலரும் "60வது படம் பெரிய இயக்குநருடன் பணிபுரியலாம்" என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு "எனக்கு பரதன் மீது நம்பிக்கை இருக்கிறது.
கண்டிப்பாக எனது திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக அப்படம் இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார் விஜய்.
கண்டிப்பாக எனது திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக அப்படம் இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார் விஜய்.
இப்படத்தின் எடிட்டராக ப்ரவீன், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், விஜய்யுடன் நடிக்கும் காமெடியனாக சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.