பீகார் தோல்வி வெறும் ஆரம்பம் தான்.. குஷ்பு !

பீகார் சட்டசபை தேர்தல் மூலம் பாஜகவின் தோல்வி முகம் துவங்கியுள்ளது. இனி அக்கட்சி பல தோல்விகளை சந்திக்கும் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
 Bihar loss is just a trailer for BJP: Khushbu
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி தோற்கடித்துள்ளது. 

இந்நிலையில் இது குறித்து நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறுகையில், பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இது துவக்கம் தான். இனி அந்த கட்சி பல தோல்விகளை சந்திக்கும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை.

அது தான் அக்கட்சியின் தோல்விக்கு காரணம். தமிழக சட்டசபை தேர்தலுக்காக நான் தீவிரமாக பிரச்சாரம் செய்வேன். எங்கெங்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறுகிறதோ அங்கெல்லாம் செய்வேன். 

நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறி அறிஞர்களும், சாதனையாளர்களும் விருதுகளை திருப்பிக் கொடுக்கும் விஷயத்தில் காங்கிரஸ் யாரையும் தூண்டிவிடவில்லை. விருதுகளை திருப்பிக் கொடுப்பவர்களை பற்றி பாஜகவினர் தரக்குறைவாக விமர்சிப்பது சரி அல்ல என்றார்.
Tags:
Privacy and cookie settings