துபாயில் மேகக் கூட்டத்துக்கு இடையில் வாழும் இந்தியர்கள் !

துபாயில் 101 மாடிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் மெரினா 101 ஓட்டலின் சுமார் 1400 அடி உயர கட்டிடத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியரான அமித் குமார் சர்மா என்பவர்
துபாயில் மேகக் கூட்டத்துக்கு இடையில் வாழும் இந்தியர்கள் !
ஒரு நாளின் 12 மணி நேரத்தை மேகக் கூட்டத்துக்கு இடையில் கழித்து வருவதாக அராபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஓட்டலை கட்டும் கட்டுமான நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வரும் அமித் குமார், சுமார் 465 மீட்டர் உயரத்தில் உள்ள 

ஒரு கிரேனில் இருந்தபடி காலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வேலை செய்கிறார்.
வேலைக்கு புறப்படும் போதே கையோடு மதிய உணவையும் கொண்டு சென்று விடும் இவர், பணியின் இடையில் 3 மணி நேர ஓய்வு கிடைத்தாலும், 

கீழே இறங்கி வராமல் சுமார் 12 மணி நேரத்தையும் மேக கூட்டங்களுக்கு இடையில் கழிப்பதையே விரும்புவதாக தெரிவிக்கிறார்.

இவ்வளவு உயரத்தில் இருந்து கொண்டு தரையை பார்க்க பயமாக இல்லையா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமித் குமார், முதன் முதலாக மேலே ஏறி வந்த போது சற்று பயமாக தான் இருந்தது.

நாளடைவில் அந்த பயம் விலகி விட்டது. 25 மைலுக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசும் போது மட்டும் கிரேனை நிறுத்தி விடுவேன் என்கிறார்.

உங்கள் பணியில் சிலிர்ப்பூட்டும் அனுபவம் ஏதும் நிகழ்ந்தது உண்டா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சமீபத்தில் ஒரு நாள் எனது கிரேனுக்கு மிக நெருக்கமாக ஒரு ஹெலிகாப்டர் வந்து விட்டது.
துபாயில் மேகக் கூட்டத்துக்கு இடையில் வாழும் இந்தியர்கள் !
நல்ல வேளையாக உள்ளே நான் இருப்பதை பார்த்து விட்ட விமானி, உடனடியாக ஹெலிகாப்டரை வேறு பக்கமாக திருப்பி விலகிச் சென்று விட்டார். 

அந்த நேரத்தில் நான் கிரேனை இயக்கி இருந்தால் எதிர்பாராத பேரழிவு ஏற்பட்டிருக்கும் என கூறுகிறார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து,  இந்த கட்டிடம் ஓட்டல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Tags: