அருங்காட்சியகத்தில் ‘சுதந்திர தின’ சாவிக்கொத்து வெளியீடு !

இந்திய சுதந்திர தின நினைவு தபால் தலை உருவம் பொறிக்கப்பட்ட சாவிக்கொ த்து சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் இன்று மாலை வெளியிடப்படுகிறது. 
 
இதுகுறித்து தொல்லியல் துணை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது: 

நாடு சுதந்திரம் பெற்றபோது சென்னை கோட்டை கொத்தளத்தில் பட்டு நூலி ழையால் செய்யப்பட்ட தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அது கோட்டை அருங்கா ட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கொடியை மெருகுபடுத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. 

இந்திய சுதந்திர தினத்தின் நினைவாக வெளியிடப்பட்ட தபால் தலை உருவம் பொறிக்கப்பட்டு சாவிக்கொத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இது சுதந்திர தினத்தன்று (இன்று) மாலை 4 மணிக்கு அருங்காட்சியக வளாகத் தில் வெளியிடப்படுகிறது. அருங்காட்சியகத்துக்கு வரும் காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தின நினைவாக இந்த சாவிக்கொத்து வழங்கப்படும். 

விரைவில், அருங்காட்சியக வளாகத்தில் உள்ள வேறு சில பொருட்களின் உருவத்து டன் நினைவுப் பொருட்கள் தயாரிக் கப்பட்டு, பார்வையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இங்கு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால், பார்வையாளர்களின் நினைவில் நிற்குமாறு நினைவுப் பொருட்களை வழங்க முயற்சி மேற்கொள் ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 
Tags:
Privacy and cookie settings