தொழில்நுட்பம் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி’ என்பார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணம், 


நாம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் செல்போன். தொலைத் தொடர்பு வசதியின் உச்சம் செல்போன்.

நினைத்த நேரத்தில் நினைத்தவ ருடன் பேச இந்த குட்டியூண்டு உபகரணம் உதவுகிறது. 

நினைத்த நேரத்தில் வேறு சில ‘விஷ(ம) யங்களையும்’ செய்ய முடிவது தான் வினை.

புரியவில்லையா? கொஞ்சம் பிளாஷ் பேக்குக்குப் போங்கள். ஒரு காலத்தில் ‘அந்த’ மாதிரி படங்களைப் பார்க்க ஆசைப்படும் 
இளசுகள், பெரிசுகள், ஊருக்கு வெளியே ஒதுங்கிக் கிடக்கும் ஓய்ந்துபோன திரையரங்குக்கு பயந்து பயந்து பதுங்கிப் பதுங்கி போவார்கள்.

இன்றோ ஆபாசப் படங்கள் செல்போன் வாயிலாக உள்ளங்கைக்கு வந்து விட்டன. சக மாணவன், 

தெருமுக்குக் கடை, இணைய தளம் மூலம் செல் போனில் ‘ஆபாசங்களை’ அள்ளித் திணித்துக் கொள்ள முடிகிறது. விரும்பிய நேரம் பார்க்க முடிகிறது.

இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவர் கையிலும் லேட் டஸ்ட் செல் போன் தவழ்கிறது. 

யோசித்துப் பாருங்கள்… விபரீதம் புரியும்! ஆபாசக் காட்சிகளுக்கு டி.வி.யோ, லேப்டாப்போ தேவை யில்லை.

யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயமில்லை. கிடைத்த ‘கேப்’பில் சில நொடிகளில் சாதாரணமாய் செல் போன் நம்பர் தேடுவதைப் போலவே பார்த்து விடும் வசதி. 

வாடிக்கையா ளர்களின் இந்த ஆவலைப் புரிந்து கொண்டு அனேக ‘சப்ளையர் களும்’ உருவாகி விட்டார்கள். 


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேவையறிந்து அவர்கள் ‘டேஸ்ட்’ டுக்கு ஏற்ப சேவை செய்கிறார்கள். 

ஒரு செல்போன் சர்வீஸ்காரர் சொல் வதைக் கேளுங்கள்… ”இப்போ தெல்லாம் பெரும்பாலா னவர்கள் வெளி நாட்டு ஆபாசப் படங்களை விரும்புவ தில்லை.

அவற்றில் ‘எல்லாமே’ இயந்திரத் தனமாய், எந்தக் கவர்ச்சியும் இல்லாமல் நடந்து முடிந்து விடுகின்றன என்கிறார்கள். 

மாறாக, ‘மார்பிங்’ செய்யப்பட்ட பிரபலங்களின் செக்ஸ் படங்கள், தென்னிந்தியப் படங்கள், 
சிறுசிறு கிளுகிளு எம்.எம்.எஸ்.கள் ஆகிய வற்றைத் தான் விரும்புகி றார்கள்” என்கிறார்.

பெங்களூர், மைசூர் பகுதியில் சமீபத்தில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று அதிர வைக்கிறது. செல்போன் வைத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களில் 75 சதவீதம் பேர் தினமும் ஆபாசம் தரிசிக்கிறார்கள்.

அவர்கள் இதற்காக வேறு எந்த சாதனத்தையும் விட செல்போனை 6 மடங்கு அதிகமாகப் பயன்படுத்து கிறார்கள். 

ஆபாச தாகமுள்ளோர் அதிகரிப்பை அடுத்து, அவர்களுக்கு சேவை செய்வோர் எண்ணிக்கையும் அதிகரித்தி ருக்கிறது.

படிக்கிற வயதில் மாணவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்து கவனம் சிதைந்து போகிறார்கள் என்றால், 

அவர்களுக்குக் கிடைக்கும் ‘பாக்கெட் மணி’யும் இப்படிக் கரைந்து போகிறது.

இதற்கு அடிமை யானவர்கள், அடுத்து வீட்டிலேயே பணத்தை எடுக்கிறார்கள். 

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட ஆபாச வீடியோ கிளிப் பரபர ப்பாக பரப்பப் படுகிறது.

சட்டசபையிலேயே செல்போனில் ஆபாசப் படம் பார்த்ததற்காக கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. மந்திரிகள் இருவர் 

ராஜினாமா செய்தார்களே ஞாபகமி ருக்கிறதா? அவர்கள் பார்த்தது, அப்போது ‘ஹிட்’டாக இருந்த ‘பசிலா’ என்ற ஆபாசப் படத்தை.


பொதுவாக, இயல்பாக படமாக்கப்படும் உள்ளூர் சரக்குக்கு அதிக மதிப்பிரு க்கிறது. 

மும்பை போன்ற ஜனசமுத்திரங்களில் மூலைக்கு மூலை ஆபாசப் படம் வழங்கும் ‘சேவை’ நடக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு நபரான ஜுனைத், 4 ஜி.பி. மெமரி கார்டுக்கு 250 ரூபாய் கேட்கிறார். 

இது ‘வழக்கமான’ படம் அல்ல என்று உத்தர வாதமும் அளிக்கி றார். 16 கே.பி. என்றால் 400 ரூபாய். இவருக்கு சில பெண் வாடிக்கையா ளர்களும் உண்டாம்.

செல்போன் சர்வீஸ் சென்டர்கள், ‘டாப் அப்’ கடைகள் பலவும் கறுப்பான மறுபக்கத்தைக் கொண்டிருக் கின்றன. 
ஆனால் யாரும் இந்தக் கடைகளுக்கு நேரே சென்று, கிளுகிளு காட்சிகள் கிடைக்குமா என்று கேட்டுவிட முடியாது.

உடனடியாகப் பின் வாங்கி விடுவார்கள் அல்லது தாங்கள் அப்படிப் பட்ட காட்சிகளை அளிப்பதில்லை என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்து விடுவார்கள். 

அடிக்கடி இல்லா விட்டாலும் எப்போதாவது நடக்கும் போலீஸ் ரெய்டு தான் காரணம்.

எனவே பழக்கமான வாடிக்கை யாளர்களுக்கு அல்லது அவர்களுடன் செல்பவர் களுக்குத் தான் சேவை கிடைக்கும். 

கேட்கக் கூச்சப்படும் புதியவர்கள் என்றால், அவர்களின் உடல் மொழி யிலேயே விஷயத்தை அறிந்து கொண்டு விசாரிப்பார்கள்.

இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாசப் படங்கள், வீடியோக்கள் ஏராளம். ஆக, தயாரிப் புச் செலவு என்பது வெகு குறைவு. 

எனவே வாடிக்கையா ளரின் தோற்றத்தைப் பார்த்து விலையை நிர்ணயிக் கிறார்கள்.

கிடைக்கும் தொகை ஏறக்குறைய முழுக்க முழுக்க லாபம் தான். ஆமதா பாத்தின் ரிலீப் ரோட்டில், 

இங்கு ‘டவுன் லோடு செய்து தரப்படும்’ என்ற போர்டுடன் சிறு சிறு கடைகள் நிறைய இருக்கின்றன.

இங்கு வசதியான வீட்டுப் பையன்கள் தங்களின் பெரிய திரை கொண்ட 3ஜி செல்போனுடன் படையெடுக் கிறார்கள்.


இவர்களின் நிபந்தனை யெல்லாம், படம் தெளிவாக இருக்க வேண்டும், வைரஸ் அபாயம் இருக்கக் கூடாது என்பது தான். 

இந்த மாதிரி கடை ஒன்றின் உரிமையா ளரான ராக்கி, ”நடுத்தர, உயர் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளவட்டங்கள் தான் எனது வாடிக்கை யாளர்கள்” என்கிறார்.

இவரிடம் 100 ரூபாய்க்கு ‘டவுன்லோடு’ செய்வதற்காக காத்திருக்கும் கல்லூரி மாணவர் விகாஸ், ”நாங்கள் 6 பேர் ஒரு ‘கேங்’. 

இந்த ‘கேங்’கில் பெண்களும் உண்டு. நாங்கள் பெறும் ஆபாசப் படங்களை எங்களுக்கு இடையே பகிர்ந்துகொள்வோம்.

வெறும் 100 ரூபாய்க்கு எனக்கு 20-க்கும் மேற்பட்ட எச்.டி. வீடியோ கிளிப்கள் கிடைக்கும்” என்கிறார். 

‘குரூப் ஸ்டடி’ போல விகாஸ் நண்பர் குழு (இதில் பெண்களும் உண்டு என்று சொன்னோமே!) 

வாரம் ஒருமுறை கூடி ஒன்றாக ஆபாசக் காட்சிகளைப் பார்த்து ரசிப்பதும் உண்டாம்.

சில மாணவர்கள், தாங்கள் வாடிக்கையா ளர்களாக உள்ள கடைகளுக்கே தங்களுக்குக் கிடைக்கும் புதிய வீடியோ கிளிப்களை அளித்து உதவி செய்வதும் உண்டாம்.

இதில் இன்னொரு பக்கமும் உண்டு. 

தற்போது பலரும் தங்கள் செல்போனே தங்களுக்கு வசதி என்று இறங்கி விட்டதால், ஆபாச சி.டி., டி.வி.டி. விற்பனை செய்வோர் அடிவாங்கிக் கிடக்கிறார்கள்.
அவர்களுக்கு 20 சதவீதம் அளவுக்கு ‘பிசினஸ்’ பாதித்திருக்கி றதாம். ”சற்று வயதான 

பெண்கள் சிலர் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கி விட்டு, கேட்கிற காசை கொடுத்து சி.டி. வாங்குவார்கள்.

அதன் கவரை அவசரமாகக் கிழித்தெறிந்து விட்டு தங்கள் ஹாண்ட் பேகுக்குள் திணித்துக் கொண்டு அவசரமாக நகர்வார்கள். 

அதெல்லாம் பழைய காலமாகி விட்டன” என்கிறார் ஒரு திருட்டு சி.டி. விற்பனையாளர்.


இளசுகள் இயல்பாகவே இந்த ஆபாச அலையில் அடித்துச் செல் லப்படுகிறார்கள் என்றால், 

நடுத்தர வயதினர், பெரியவர்களும் பலரும் ஒரு ‘ரிலாக்ஸாக்காக’ ஆபாசப் படம் பார்ப்பதாகக் கூறுகிறார்கள்.

அலுவலக வேலை நெருக்கடியில் இருந்து ஆறுதல் அளிப்பது இது போன்ற படங்கள் தான் என்கிறார் ஒருவர். 

வெளியே பட்டவர்த் தனமாகத் தெரியா விட்டாலும் சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் பாய்ந்திரு க்கும் 
ஆபாச அலைக்கு அணை போட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

பெண்கள் மீதான எல்லை மீறல், பாலியல் வல்லுறவு போன்ற வற்றுக்கு எல்லாம் 

இது போன்ற காட்சிகளே தூண்டுதல் ஆகின்றன என்பது அவர்களின் கவலை. 

அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இது! மக்களிடம் விழிப்புணர்வு அவசியம்!