ஜனாஸாவை குளிர் சாதனப் பெட்டியில் வைக்கலாமா?

நமது இஸ்லாம் மார்க்கம் இறந்த வரை சீக்கிரமாக கஃபனிட்டு அடக்கம் செய்ய கட்டளை இடுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; 
ஜனாஸாவை குளிர் சாதனப் பெட்டியில் வைக்கலாமா?
நீங்கள் ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாக இருந்தால் அந்த நன்மையின் பக்கம் விரைந்து. செல்கிறீர்கள். 
அவ்வாறு இல்லா விட்டால் ஒரு தீங்கை உங்களின் தோள்களில் இருந்து (விரைவில்) இறக்கி வைக்கிறீர்கள்" என்று கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி).

எனவே ஃபுககாக்கள் "ஜனாஸா தொழுகைக்கு அதிகமாக கூட்டம் வரும் என்பதற்காக ஜும்ஆவிற்கு முன்பே தயாரான ஜனாஸாவை ஜும்ஆ வரை பிற்படுத்து வதும் மக்ரூஹ் என்று கூறுகிறார்கள்.

எப்பொழுது தயாராகி விடுகிறதோ அப்போதே மய்யித்தை தொழ வைத்து அடக்கம் செய்திட வேண்டும். (நூல்: ரத்துல் முக்தார் 2/239).
எனவே தான் மய்யித்தை அடக்கம் செய்யச் செல்லும் போது சற்று விரைவாக (ஓடக்கூடாது) நடந்து செல்ல கட்டளை யிடப்படுகிறது. (நூல்: அல்பஹ்ருர் ராயிக் 2/335).
நாம் இவ்வாறு ஷரீஅத் கூறியுள்ள முறைப்படி நடந்து கொண்டால் குளிர்சாதனப் பெட்டியில் மய்யித்தை வைப்பதைப் பற்றி கேள்வியே வராது.

சமூகத்தில் இன்று குளிர் சாதனப் பெட்டியில் மய்யித்தை வைக்கும் வழக்கம் பரவலாகி விட்டதால் 

மய்யித்தை சீக்கிரம் அடக்கம் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி பல மணி நேரம், சில சமயம் ஓரிரு தினங்கள் வரை கூட தாமதப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

இறந்த மனிதருக்கு உயிருள்ள மனிதரைப் போன்றே கண்ணியம் கொடுக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது மய்யித்திற்கு வேதனையை ஏற்படுத்தும்.
ஒருவருக்கு உயிரோடு இருக்கும்போது துன்பம் கொடுத்தால் ஏற்படும் வேதனையைப் போன்று அவர் இறந்த நிலையில் வேதனை கொடுத்தாலும் அதை அவர் அனுபவிப்பார்.
ஆகவே தான் ஹதீஸில் உயிருள்ளவரின் எலும்புகளை உடைப்பது எப்படி தடுக்கப் பட்டுள்ளதோ அதே போன்று மய்யித்தின் எலும்பு களையும் உடைக்க தடை வந்துள்ளது.

மய்யித்தை குளிர் சாதனப் பெட்டியில் வைப்பதற்கு "தூரமாக உள்ள உறவினர்கள் மய்யித்தை கடைசியாக ஒரு முறை பார்த்துக் கொள்வார்கள்" என்பதே முக்கிய காரணமாக சொல்லப் படுகிறது.

கடைசியாக மய்யித்தை பார்ப்பது - தீதாருக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கி றார்கள். 

ஆனால் தீதார் பற்றியோ கடைசியாக மய்யித்தை பார்த்தால் நன்மை கிடைக்கும் என்பதாகவோ மார்க்கத்தில் எந்த ஆதாரப் பூர்வமான செய்தியும் இல்லை.

இது போன்ற காரணங் களுக்காக மய்யித்தை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது தவறாகும். 
அதை விட்டும் தவிர்ந்திருப்பதும் மற்றவர் களுக்கு இதை புரிய வைப்பதும் அவசியமாகும்.
சில மஸ்ஜித் நிர்வாகமே தங்களின் மார்க்க அறிவின்மையால் மஸ்ஜிதின் மூலமாக குளிர்சாதனப் பெட்டி ஏற்பாடு செய்து தருவது கைசேதமான விஷயமாகும். (நூல்: அஹ்ஸனுல் ஃபதாவா 4/319)

- மனாருல் ஹுதா,
Tags: