ஜுலியன் அஸாஞ்சின் தஞ்சக் கோரிக்கையை நிராகரித்தது ஃப்ரான்ஸ் !

விக்லீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சின் தஞ்சக் கோரிக்கையை பிரான்ஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளது.
 ஜுலியன் அஸாஞ்சின் தஞ்சக் கோரிக்கையை நிராகரித்தது ஃப்ரான்ஸ் !
ஜூலியன் அசாஞ்சிற்கு அவசர ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் ஃப்ரான்ஸ்வா ஒல்லாந், அவருக்கு ஐரோப்பாவில் பிடியாணை விதிக்கப் பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் ஃப்ரான்ஸ்வா ஒல்லாந்துக்கு எழுதிய வெளிப்படையான கடிதமொன்றை பிரெஞ்சுப் பத்திரிகையான லெ மோன்ந் இன்று காலை பிரசுரம் செய்திருந்தது. 

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜூலியன் அசாஞ் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
லன்டனிலுள்ள எக்குவாடோர் தூதரகத்தில் தற்போது அசாஞ்சே தஞ்சமடைந்துள்ளார். 

சுவீடனில் அசாஞ்சிற்கு எதிராக பாலியல் வல்லுறவு குற்றச் சாட்டுள்ளதோடு அவர் அங்கு தேடப்பட்டு வரும் நபராகவும் இருக்கிறார்.
Tags:
Privacy and cookie settings