நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசை.. நயன்தாரா !

நகைச் சுவை வேடங்களில் நடிக்க ஆசைப் படுவதாக நயன்தாரா கூறினார். வித்தியாச மான வேடங்களில் நடிக்க நயன்தாரா ஆர்வம் காட்டுகிறார்.
 

ஏற்கனவே தெலுங்கில் தயாரான 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' படத்தில் சீதா கதா பாத்திரத்தில் நடித்தார். ’பில்லா’ படத்தில் அதிரடி வேடத்தில் சண்டை போட்டார்.

'அனாமிகா'வில் தீவிரவா திகள் தொடர்பில் இருக்கும் கணவனை கொலை செய்பவராக தோன்றினார். தற்போது 'மாயா' என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இதில் பேய் பிடித்த பெண்ணாக வருகிறார்.

'நானும் ரவுடிதான்' என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தை இயக்கும் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசுக்கள் வந்துள்ளன. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் இணையதளங்களில் பரவி உள்ளது.

நயன்தாரா தற்போது நகைச்சுவை கதைகளை தேடுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

’நிறைய கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். அடுத்து நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசை. ஏற்கனவே தெலுங்கு படம் ஒன்றில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தேன்.

அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.எனவே, தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது’. இவ்வாறு நயன்தாரா கூறினார்.
Tags:
Privacy and cookie settings