மூவாயிரம் கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் சாலைகள் விரிவாக்கம்

தமிழகத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சாலைகள் விரிவாக்கம் செய்யும் திட்டம் இன்று தொடங்க உள்ளது.
 
தமிழகத்தில் மதுரை முதல் ராமநாதபுரம் வரையான இரு வழிச் சாலையை 4 வழி சாலையாக மாற்றும் நடவடிக்கை மற்றும், தஞ்சாவூர் முதல் நாகப்பட்டினம் வரை

இரு வழிச் சாலையாக மாற்றி அமைக்கும் நடவடிக்கைக்கு இன்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்த அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நடக்க உள்ள நிலையில் தமிழக அரசு சார்பாக விழாவில் கலந்துக்கொள்ள நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழக அரசு சார்பில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக்கொள்வர் என்றும் தெரிய வருகிறது.
Tags:
Privacy and cookie settings