ஓர் விமாண பணிப்பெண்ணின் நிர்வாண உண்மைகள் !

பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் விமான பணிப்பெண் ஒருவர் பறக்கும் விமானத்தின் விமானி அறையில் (கொக்பிட்),
விமானி ஒருவருடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளார்.

மெண்டி ஸ்மித் எனும் இப்பெண், பிரிட்டனின் பிரசித்தி பெற்ற வேர்ஜின் அட்லாண்டிக் எயார்வேஸ் விமான சேவை நிறுவனத்தில், 
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக விமானப் பணிப்பெண்ணாக கடமையாற்றியவர். பிரிட்டனின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான சேர் ரிச்சர்ட் பிரான்ஸுனுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் இதுவாகும்.

தற்போது 41 வயதான மெண்டி ஸ்மித், தனது அனுபவங்களைத் தொகுத்து, நூலொன்றை எழுதியுள்ளார்.

கேபின் பீவர் எனப் பெயரிடப்பட்ட இப்புத்தகத்திலேயே, பறக்கும் விமானத்தின் விமானி அறையில் பாலியல் உறவில் ஈடுபட்டமை குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் வடபகுதியிலுள்ள ஹார்ட்பூல் நகரில் வளர்ந்தவர் மெண்டி ஸ்மித். 

இளம் வயது முதல் தான் ஒரு விமான பணிப்பெண்ணாக பணிபுரிய வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு வளர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் பயணிகளுக்கு தரமான சேவைகள் வழங்குவது மட்டுமல்ல, கோடீஸ்வரர்களும், தொழிலதிபர்களும் பயணிக்கும் விமானங்களில் கிடைக்கும் 
சொகுசான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும் தான் அவரை விமான பணிப்பெண்ணாகவே மாற்றியதாம்.
ஓர் விமாண பணிப்பெண்ணின் நிர்வாண உண்மைகள் !
விமானத்தில் தனக்கு கிடைத்த சொகுசு வாழ்க்கை, பயணிகளிடமிருந்து வந்த பாலியல் தொல்லைகள், 

விமானத்தில் இளம் ஜோடிகளின் அத்து மீறிய பாலியல் நடவடிக்கைகள் குறித்தும் தனது புத்தகத்தில் மெண்டி வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
ஒரு விமான பணிப்பெண் எதற்கும் துணிந்தவர் என்பதால், விமானியான தனது காதலனுடனான வித்தியாசமான அனுபவங்களை அப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஆனால், இவர் விமானியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட விமானம் பாரிய பயணிகள் விமானமல்ல. செஸ்னா எனும் 

இரு ஆசனங்கள் கொண்ட சிறிய விமானமொன்றிலேயே தனது அப்போதைய காதலரான விமானியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாராம் மெண்டி.

ஆயிரக்கணக்கான அடிகள் உயரே பறந்த விமானத்தில் நடந்த இந்த அனுபவத்தை தன் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்றும், இது போல் பல முறை நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் பணிபுரிந்த விமானத்தில் வரும் பயணிகள் தன்னிடம் அத்துமீறி நடந்தமை, இரவு நேரங்களில் விளக்குகள் அணைந்த பிறகு 

இளம் ஜோடிகள் நிர்வாணமாக காணப்படுவது உள்ளிட்ட எண்ணற்ற காட்சிகளை பல முறை கண்டுள்ளேன்.

வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு பணிப்பெண்ணாக தான் அனுபவிக்காத சொகுசு வாழ்க்கையே இல்லை. 

நான் பணியின் போது கொண்டு செல்லும் ஆடைகளை விட பாலியல் பொம்மைகள் முதலான பொருட்கள் தான் தன்னுடைய பெட்டியில் நிரம்பி இருக்கும்.
ஒரு செக்ஸ் கடையையே கொண்டு செல்வதைப் போன்ற உணர்வு அப்போது ஏற்படும் என வெளிப்படையாக மெண்டி கூறியுள்ளார். 

கோடீஸ்வரர்கள் சிலருடன் உற்சாகமான பார்ட்டிகளில் கலந்து கொண்டது மகிழ்ச்சியான தருணங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஓர் விமாண பணிப்பெண்ணின் நிர்வாண உண்மைகள் !
கடந்த 10 வருடங்களில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றிய தனக்கு கோடீஸ்வரர்கள் பலரிடமிருந்து எண்ணற்ற விலை மதிப்பில்லா 

ஆபரணங்கள், பரிசு பொருட்கள் கிடைத்துள்ளன என பெருமையுடன் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பணியிலிருந்து விலகியுள்ள மெண்டி, கிளென் என்ற விளையாட்டு வீரரை மணந்து கொண்டு இங்கிலாந்தின் சசெக்ஸ் பிராந்தியத்தில் வசித்து வருகிறார். 

 இத்தம்பதிக்கு 4 வயதான ஒரு குழந்தை உள்ளது.
Tags: