விக்ரம் உடன் மோதும் தனுஷ் !

விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் நடித்த விக்ரம் அப்படத்துக்காக வருடக்கணக்கில் கால்ஷீட் கொடுத்து நடித்தார்.
விக்ரம் உடன் மோதும் தனுஷ் !
எனவே அடுத்து நடிக்கும் படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடிக்கவே ஒப்புக் கொண்டார்.

ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக இந்தப் படமும் நீண்ட கால தயாரிப்பாக மாறி விட்டது. 10 எண்றதுக்குள்ள படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்க ஆரம்பித்ததும்

இயக்குநரும் ஹீரோவும் பேசிப்பேசி படத்தை பிரம்மாண்ட மாக்கி விட்டனர். செலவும் எகிற… படப்பிடிப்பு நாட்களும் அதிகரித்து விட்டன. 

இந்நிலையில் காந்தி ஜெயந்தி அன்று 10 எண்றதுக்குள்ள படத்தை வெளியிட இருப்பதாக கூறி வந்தனர். இப்படத்தில் சம்மந்தப் பட்டவர்களும் அவ்வப் போது ட்விட்டரில் இந்த தகவலை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக தனுஷ் தற்போது நடித்து வரும் விஐபி -2 படத்தையும் காந்தி ஜெயந்தி அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். 

இந்த தகவல் விக்ரம், விஜய்மில்டன் ஆகியோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.
Tags:
Privacy and cookie settings